ஈரான் போரால் பல நாடுகளில் லாக் டவுன் சூழல் - பள்ளி விடுமுறை; ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை

Liquefied Petroleum Gas Pakistan India Israel-Iran conflict
By Karthikraja Mar 10, 2026 03:44 PM GMT
Report

ஈரான் போர் காரணமாக பல்வேறு நாடுகளும் கொரோனா கால லாக் டவுன் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஈரான் போர்

கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது.

இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 

ஈரான் போரால் பல நாடுகளில் லாக் டவுன் சூழல் - பள்ளி விடுமுறை; ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை | Iran War Leads Online Class Wfh Lockdown Stage

இதன் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் போர் சூழல் நிலவி வருகிறது. பல நாடுகளில் பள்ளி கல்லூரிகள் இணைய வழியில் நடைபெறுகிறது. அலுவலகங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை(Work from Home) பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஏகப்பட்ட விமான நிறுவனங்கள் தங்களது விமானசேவையை நிறுத்தியுள்ளது. 

வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் காயம்?

வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் காயம்?

ஆனால் இந்த போரின் தாக்கம், மத்திய கிழக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டால் லாக் டவுன்

எண்ணெய் கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலால், உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அரம்கோ தொழிற்சாலையை மூடியது. கத்தார் அதன் LPG, CNG உற்பத்திகளை நிறுத்தியது. 

போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு - மூடப்படும் உணவகங்கள்

போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு - மூடப்படும் உணவகங்கள்

உலகின் 20% எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை(strait of hormuz) ஈரான் மூடியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

ஈரான் போரால் பல நாடுகளில் லாக் டவுன் சூழல் - பள்ளி விடுமுறை; ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை | Iran War Leads Online Class Wfh Lockdown Stage

மேலும், LPGக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் பல்வேறு உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஈரான் போரால் பல நாடுகளில் லாக் டவுன் சூழல் - பள்ளி விடுமுறை; ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை | Iran War Leads Online Class Wfh Lockdown Stage

இதே போல், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பும் போர் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். 

ஈரான் போரால் பல நாடுகளில் லாக் டவுன் சூழல் - பள்ளி விடுமுறை; ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை | Iran War Leads Online Class Wfh Lockdown Stage

அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் வீட்டில் இருந்து பணியாற்றுவார்கள். அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு 2 நாள் வேலை, பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை, உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணையவழி வகுப்பு ஆகிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், சட்டமன்ற ஊழியர்களின் ஊதியங்கள் 25% குறைப்பு, அனைத்து அரசு அதிகார மட்ட சந்திப்பையும் இணைய வழியில் மேற்கொள்ள வேண்டும்.

திருமணம் போன்ற நிகழ்வுகளில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். ஒரு முக்கிய உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல் வங்கதேசமும் எரிபொருளை சேமிக்கும் வகையில், பள்ளி கல்லூரிகளை மூடி மாணவர்கள் இணைய வழி வகுப்பை தொடர அறிவுறுத்தியுளளது. 

ஈரான் போரால் பல நாடுகளில் லாக் டவுன் சூழல் - பள்ளி விடுமுறை; ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை | Iran War Leads Online Class Wfh Lockdown Stage

கார் மற்றும் இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்குவதில் மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுத்தியுள்ள தாய்லாந்து, மின்சார பயன்பாட்டை சிக்கமானாக கடைப்பிடிக்க வேண்டும், மின்தூக்கி இயந்திரங்களுக்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டும். 

ஈரான் போரால் பல நாடுகளில் லாக் டவுன் சூழல் - பள்ளி விடுமுறை; ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை | Iran War Leads Online Class Wfh Lockdown Stage

ஏசியை 26–27°C வெப்பநிலையில் அமைத்தல், மின் சாதனங்களை அணைத்தல், நகல் இயந்திரப் பயன்பாட்டைக் குறைத்தல் ஆகிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

பெட்ரோலிய பொருட்களின் மீதான இறக்குமதி வரியை நீக்கிய வியட்நாம், வாரத்திற்கு 4 நாள் வேலை, ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது போன்ற சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக உலகம் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்ட போது, இதே போல் பள்ளிகள் கல்லூரிகள் இணைய வழியில் நடைபெற்றது. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டார்கள்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US