ஈரான் போரால் எண்ணெய் விற்பனையில் பல பில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் புடின்

Vladimir Putin Israel-Iran conflict Crude Oil
By Arbin Mar 17, 2026 04:16 AM GMT
Report

ஈரான் மீதான போர் தொடர்பில் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், ரஷ்யா 6 பில்லியன் பவுண்டுகள் வரையில் சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17,000 ஷாஹத் ட்ரோன்கள்

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கியதை அடுத்து, ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை தளர்த்தி எண்ணெய் விலையை கட்டுப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த முடிவு விளாடிமிர் புடினுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

ஈரான் போரால் எண்ணெய் விற்பனையில் பல பில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் புடின் | Iran War Putin Rakes Oil Cash

வெளியான தரவுகளின் அடிப்படையில், ரஷ்யா ஏற்றுமதிகள் மூலம் தினமும் அரை பில்லியன் ஈட்டி வருகிறது என்றே தெரிய வந்துள்ளது. மேலும், ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும், ஈரானிய வடிவமைப்பிலான சுமார் 17,000 ஷாஹத் ட்ரோன்களை வாங்குவதற்கு இது போதுமானதாக இருக்கும் என்றே கூறுகின்றனர்.

உக்ரைனில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளையும், உள்கட்டமைப்பிற்குப் பெரும் சேதத்தையும் ஏற்படுத்திய வலுவான ஆயுதமாகும் இந்த ஷாஹத் ட்ரோன்கள்.

மத்திய கிழக்கில் போர் நெருக்கடி நீடிக்கும் வரையில், ரஷ்யா பெரும் ஆதாயம் ஈட்டும் என்பது உறுதி என்றும் கூறுகின்றனர். ஈரான் மீதான போர் தொடங்கி வெறும் இரண்டே வாரத்தில் எண்ணெய் விற்பனையில் இருந்து ரஷ்யா சுமார் 6 பில்லியன் பவுண்டுகளை ஈட்டியுள்ளது.

புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம்

புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம்

இந்த நிலையில், பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது சந்தைகளை நிலைப்படுத்தாது என்றும், அது ரஷ்யாவை அதே எண்ணெயை மிகச் சிறந்த விலைக்கு விற்பதற்கு வழிவகுக்கும் என்றும் விமர்சித்துள்ளனர்.

அமெரிக்கத் தடைகள் காரணமாக, ரஷ்யக் கச்சா எண்ணெய் மிகக் குறைந்த விலையில் வர்த்தகம் செய்யப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.

ஈரான் போரால் எண்ணெய் விற்பனையில் பல பில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் புடின் | Iran War Putin Rakes Oil Cash

எண்ணெய் விலைகளை உயர்த்தி

ஆனால் தற்போது ட்ரம்பின் முடிவால், ரஷ்யா பெரும் ஆதாயாம் ஈட்டும் வாய்ப்பைப் பெற்றுள்ளது என்றே கூறுகின்றனர். ஈரானை ஒரு பக்கத்திலும், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை மறுபக்கத்திலும் பிரிக்கும் இந்த ஹார்முஸ் நீரிணை வழியாக, சுமார் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.

ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என்றால், ஹார்முஸ் நீரிணை ஊடாக ஒரு லிற்றர் எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்க முடியாது என IRGC எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், ரஷ்யா தனது எண்ணெய் விலைகளை உயர்த்தி, அதன் பலன்களை அள்ளிக்கொள்ள முடிந்தது.

ஈரான் போரால் எண்ணெய் விற்பனையில் பல பில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் புடின் | Iran War Putin Rakes Oil Cash

ரஷ்ய எண்ணெய் மீது ட்ரம்ப் அளித்துள்ள 30 நட்கள் தளர்வு காரணமாக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ள இரண்டு ரஷ்ய நிறுவனங்களில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா தொடர்ந்து உலகின் ஒரு முக்கிய எரிபொருள் ஏற்றுமதியாளராகத் திகழ்கிறது; சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் அதன் முதன்மையான வாடிக்கையாளர்களாக உள்ளன.

ஆனால் பிரித்தானியா உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US