ஈரான் போரால் உலகத்துக்கு ஏற்பட இருக்கும் அடுத்த பாரிய பாதிப்பு
நமக்கு சம்மந்தமே இல்லாமல், எங்கோ சில நாடுகள் போரிட்டுக்கொண்டிருப்பதால் நம் நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துவருகிறது.
இந்நிலையில், இதே நிலை நீடித்தால், உணவுப்பற்றாக்குறையும் ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்!
அடுத்த பாரிய பாதிப்பு
ஆம், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் முதல், ஜேர்மனி, பிரித்தானியா வரை டீசல் பிரச்சினையால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகள் அறுவடைக்குத் தயாராகிவருகின்றன, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் அடுத்த விதைப்புக்குத் தயாராகிவருகின்றன.
விவசாயம் முன்போலில்லை. ஒரு ஆள் தண்ணீர் இறைத்துக்கொண்டு, ஒரு ஆள் பயிர் அறுத்துக்கொண்டிருப்பதில்லை இப்போது.
பிரம்மாண்ட இயந்திரங்கள் விதைக்கின்றன, அறுக்கின்றன, தண்ணீர் இறைக்கின்றன.
ஆக, அந்த இயந்திரங்கள் எல்லாம் இயங்க டீசல் வேண்டும். ஈரான் போர் உருவாக்கியுள்ள எரிபொருள் பற்றாக்குறையால், சில நாடுகளில் டீசல் பற்றாக்குறை நிலவுகிறது.

சில நாடுகளில் டீசல் உலை உயர்ந்துவிட்டது. வாகனங்களுக்கு 5 முதல் 10 லிற்றர் எரிபொருள் தேவைப்படலாம். ஆனால், இந்த விவசாய இயந்திரங்களுக்கு அதிக டீசல் தேவை.
இந்நிலையில், ஈரான் போர் உருவாக்கியுள்ள எரிபொருள் பற்றாக்குறையால், விவசாயம், அதாவது, விதைப்பு முதல் அறுப்பு வரை, காய்கறித் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது வரை பாதிப்புக்குள்ளாகலாம் என அஞ்சுகிறார்கள் விவசாயிகள்.
இதே நிலை நீடிக்குமானால், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜேர்மனி, பிரித்தானியா, பிலிப்பைன்ஸ் என உலக நாடுகள் பலவற்றில் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தாய்லாந்து போன்ற பல நாடுகளில், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல படகுகளுக்கு டீசல் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில், ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறது, ஆகவே அதைத் தடுக்கவேண்டும் என்ற பெயரில் அமெரிக்க ஜனாதிபதி துவக்கி விட்ட பிரச்சினை, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமே இல்லாத நாடுகளில் கூட, சாப்பாட்டு மேசை வரை வந்து எட்டிப்பார்க்கிறது.
ஆக, ஈரான் அமெரிக்கப் பிரச்சினை ஏதாவது ஒரு வழியில் தீர்ந்தாலொழிய, அது உலக நாடுகள் பலவற்றில் உணவுப்பொருட்கள் பற்றாக்குறைக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |