இனி உக்கிரத் தாக்குதல்... ட்ரம்பின் பேச்சால் நம்பிக்கை இழந்த உலக நாடுகள்

Donald Trump Israel-Iran conflict
By Arbin Apr 02, 2026 05:55 AM GMT
Report

ஈரான் மீது இனி உக்கிரத் தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூளுரைத்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கைகள் மங்கின.

தீவிரப்படுத்தப்படும்

ஈரான் போர் தொடர்பில் தீர்வுக்கான வழி குறித்துத் தெளிவான அறிவிப்பை எதிர்பார்த்திருந்த முதலீட்டாளர்களை ட்ரம்பின் உரை ஏமாற்றியதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

இனி உக்கிரத் தாக்குதல்... ட்ரம்பின் பேச்சால் நம்பிக்கை இழந்த உலக நாடுகள் | Iran War Trump Speech Hopes Dim

அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, பங்குச் சந்தைகள் சரிந்தன; எண்ணெய் விலைகள் உயர்ந்தன.

மட்டுமின்றி, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரும் குழப்பத்தைத் தூண்டிவிட்டுள்ளதும், உலகப் பொருளாதாரத்தையே கடும் வீழ்ச்சிப் பாதையில் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுமான ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, எவ்விதமான உறுதியான காலக்கெடுவையும் ட்ரம்ப் வழங்கவில்லை.

ஆனால், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில், ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப்போவதாகவும். அவர்கள் எங்கு இருக்க வேண்டுமோ, அந்த கற்காலத்திற்கே அவர்களைத் திரும்பக் கொண்டுசெல்லப்போகிறோம் என்றும் ட்ரம்ப் சூளுரைத்துள்ளார்.

மேலும், பேச்சுவார்த்தைகளின்போது ஈரானியத் தலைவர்கள் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இணங்காவிட்டால், போர் தீவிரமடையக்கூடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹார்முஸ் விவகாரம்... 35 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரித்தானியா

ஹார்முஸ் விவகாரம்... 35 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரித்தானியா

ட்ரம்பின் பேச்சை அடுத்து பிரென்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 5 சதவீதம் உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 106.16 டொலராக ஆனது. பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன; அமெரிக்கக் குறியீடு 1 சதவீதம் குறைந்தன, ஐரோப்பியக் குறியீடு 1.5 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன.

கிட்டத்தட்ட அனைத்து ஆசியப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன; ஜப்பானின் நிக்கெய் குறியீடு 1.8% மற்றும் பிற ஆசிய-பசிபிக் பங்குகளின் MSCI குறியீடு 1.5% க்கும் அதிகமாகச் சரிந்தன.

ட்ரம்பின் உரைக்குப் பிறகு, ஈரானிலிருந்து இஸ்ரேலியப் பகுதியை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து, மத்திய கிழக்கு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இனி உக்கிரத் தாக்குதல்... ட்ரம்பின் பேச்சால் நம்பிக்கை இழந்த உலக நாடுகள் | Iran War Trump Speech Hopes Dim

இஸ்ரேலில் மட்டும் இறப்பு எண்ணிக்கை 5,000 கடந்துள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் கசிந்துள்ளது. தலைநகரான டெல் அவிவ் தற்போது பாலஸ்தீனத்தின் காஸா போன்று காணப்படுவதாகவும் அரேபிய நாடுகளில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் பதிலடியாக மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை மொத்தமாக சேதப்படுத்தியதுடன், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு எதிராக மிரட்டல் விடுத்தது.

சிதைத்து வருகிறோம்

இதனால் எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்தது. மட்டுமின்றி, முக்கியத்துவம் வாய்ந்த இடைக்கால நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக ட்ரம்பின் மக்கள் செல்வாக்கும் சரிந்துள்ளது.

ஆனால், அமெரிக்காவிற்கு அந்த நீரிணை தேவை இல்லை என்றும், அப்பிராந்தியத்தின் எண்ணெயைச் சார்ந்திருக்கும் நட்பு நாடுகள் அதனை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ட்ரம்ப் சவால் விடுத்தார்.

இந்த நிலையில், இந்தப் போர் குறிப்பிடத்தக்க, உலகளாவிய மற்றும் மிகவும் சமச்சீரற்ற விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் சர்வதேச எரிசக்தி முகமை ஆகியவை புதன்கிழமையன்று எச்சரித்தன.

இனி உக்கிரத் தாக்குதல்... ட்ரம்பின் பேச்சால் நம்பிக்கை இழந்த உலக நாடுகள் | Iran War Trump Speech Hopes Dim

இதனிடையே, அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்கள், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறாது என்பதை உறுதி செய்துள்ளதாக ட்ரம்ப் கூறினார். அத்துடன், அமெரிக்காவை அச்சுறுத்துவதற்கோ அல்லது தங்கள் எல்லைகளுக்கு அப்பால் தங்கள் அதிகாரத்தைச் செலுத்துவதற்கோ ஈரான் நிர்வாகத்திற்கு உள்ள திறனை, நாங்கள் முறையாகச் சிதைத்து வருகிறோம் என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

ட்ரம்பின் ஈரான் உரைகளுக்கு முன்னதாக, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியான் அமெரிக்க மக்களுக்கு எழுதிய கடிதத்தில், தனது நாடு சாதாரண அமெரிக்கர்கள் மீது எந்தவித விரோதப் போக்கையும் கொண்டிருக்கவில்லை என்று கூறியிருந்தார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US