அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கினால்... கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், அவர்களின் இலக்குகள், தளங்கள் மற்றும் படைகள் மீது திரும்பித் தாக்குவோம் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்க தளங்கள்
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகளால் ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் முதன்மையான சர்வதேச விமான நிலையமான பென் குரியன் அருகில் தாக்கியதை அடுத்து இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில், அண்டை நாடுகளுடன் ஈரானுக்கு எந்த விரோதமும் இல்லை என்றாலும், பழிவாங்கும் பட்சத்தில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்குகளாகக் கருதப்படும் என்றே தெரிய வந்துள்ளது.
இந்தப் போரை அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தொடங்கினால், ஈரான் அவர்களின் நலன்கள், தளங்கள் மற்றும் படைகள் மீது, அவர்கள் எங்கிருந்தாலும், எப்போது தேவைப்பட்டாலும் குறிவைக்கும் என நசீர்சாதே தெரிவித்துள்ளார்.
ஈரான் சமீபத்தில்தான் 1,200 கிலோமீற்றர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட Qassem Bassir என்ற அதி நவீன ஏவுகணையை அறிமுகம் செய்தது.
சமீபத்திய ஆண்டுகளாக ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் ஹவுதிகள் ஞாயிற்றுக்கிழமை, டெல் அவிவ் நகருக்கு வெளியே பென் குரியன் விமான நிலையத்தின் முனையம் 3 இலிருந்து 75 மீற்றர் தொலைவில் தொலைவில் விழுந்த ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவினர்.
இராணுவ நடவடிக்கை
குறித்த ஏவுகணையானது நான்கு அடுக்கு வான் பாதுகாப்பைத் தாண்டிச் சென்று விமான நிலையத்தின் சுற்றளவுக்குள் உள்ள அணுகல் சாலையை ஒட்டிய ஒரு தோப்பைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹவுதிகளின் ஏவுகணையை இடைமறிக்கத் தவறியதால், தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
மார்ச் 15 ஆம் திகதி ஏமனில் ஹவுதி நிலைகள் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து ஹவுதிகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
ஈரான் ஆதரவு ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்கா தீவிரமான இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து வருவதால், இதுவரை இஸ்ரேல் ஏமன் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்துவதைத் தவிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |