இஸ்ரேல் அல்லது அமெரிக்காவுடன் மற்றொரு போர் - ஈரான் விடுத்த எச்சரிக்கை
நாங்கள் போர் நிறுத்தத்தில் இல்லை இஸ்ரேல் அல்லது அமெரிக்காவுடன் மற்றோரு போர் நடக்கலாம் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் இஸ்ரேல் போர்
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, கடந்த ஜூன் 13 ஆம் திகதி, இஸ்ரேல் அதன் மீது தாக்குதலை தொடங்கியது.
ஈரானும், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலம் பதிலடி கொடுத்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போராக வெடித்தது.
இதனை தொடர்ந்து, ஜூன் 22 ஆம் திகதி ஈரானின் அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் குண்டு வீசியது.
பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் போர் முடிவுக்கு வருவதாக இரு நாடுகளும் அறிவித்தன.
மீண்டும் ஒரு போர்
இந்நிலையில், எந்நேரமும் மீண்டும் போர் வெடிக்கலாம் என ஈரான் உச்சத்தலைவரின் தலைமை ராணுவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின்(IRGC) முன்னாள் தளபதியான யஹ்யா ரஹீம் சஃபாவி, "நாங்கள் போர் நிறுத்தத்தில் இல்லை. போரின் கட்டத்தில் உள்ளோம். எங்களுக்கும் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் இடையே எந்த ஒழுங்குமுறை ஒப்பந்தமும் எழுதப்படவில்லை.
இன்னொரு போர் நடக்கலாம், அதன் பிறகு இனி போரே நடைபெறாது. அமெரிக்காவும், ஜியோனிஸ்டுகளும் அதிகாரத்தின் மூலம் அமைதியை நிலைநாட்டுவதாக கூறுகிறார்கள்.
எனவே, ஈரானும் வலுவானதாக மாற வேண்டும். இயற்கை அமைப்பில் பலவீனமானவர்கள் நசுக்கப்படுகிறார்கள். நாங்கள் எண்களின் ராஜதந்திர, ஊடக, ஏவுகணை, ட்ரோன் மற்றும் சைபர் தாக்குதல் உத்தியை வலுப்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |