இஸ்ரேல் குறித்து உலக நாடுகளை எச்சரித்த ஈரான்: உறுதியளித்த ஜனாதிபதி
இஸ்ரேல் முன்னெடுக்கும் காஸா மற்றும் லெபனான் மீதான போர் மத்திய கிழக்கில் முடிந்து விடாது என ஈரான் உலக நாடுகளை எச்சரித்துள்ளது.
பரம விரோதியான இஸ்ரேல்
ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவிக்கையில், போர் விரிவடையும் பட்சத்தில் அதன் தீங்கான விளைவுகள் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் மட்டும் இருக்காது என்பதை உலகம் அறிய வேண்டும்.
பாதுகாப்பின்மை மற்றும் உறுதியற்ற தன்மை மற்ற பகுதிகளுக்கும், தொலை தூரத்தில் கூட பரவலாம் என்றார். ஈரானின் பரம விரோதியான இஸ்ரேல் அக்டோபர் 2023 முதல் ஹமாஸ் படைகளுக்கு எதிராக தீவிரமாக போரிட்டு வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 43,500 கடந்துள்ளது. இதில் 70 சதவிகிதத்திற்கும் மேல் பெண்களும் சிறார்களும் என ஐ.நா ஆய்வறிக்கை ஒன்றில் அம்பலமாகியுள்ளது.
ஆனால் சமீபத்தில் லெபனான் மீது இஸ்ரேல் தனது பார்வையை திருப்பியுள்ளது. அங்கே ஹிஸ்புல்லா படைகளுடன் செப்டம்பரில் இருந்து முழு அளவிலான போரில் ஈடுபட்டு வருகிறது.
ஈரானின் நடவடிக்கை
அக்டோபர் 26 அன்று, இஸ்ரேல் மீது ஈரானின் அக்டோபர் 1 தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானில் உள்ள இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
அக்டோபர் 26ம் திகதி இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ராடார் அமைப்புகளுக்கு லேசான சேதம் ஏற்பட்டதாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எச்சரித்த போதிலும் பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதியளித்துள்ளது. மேலும், காஸா மற்றும் லெபனானில் போர் நிறுத்தன் ஏற்பட்டால், ஈரானின் பதிலடி அளிக்கும் முடிவுக்கு மாற்றம் வரலாம் என்றும் கூறப்படுகிறது.
போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டு அப்பகுதியில் உள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் அப்பாவி மக்களை படுகொலை செய்வதை நிறுத்த ஒப்புக்கொண்டால், ஈரானின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என ஜனாதிபதி Masoud Pezeshkian சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |