கதிர்வீச்சின் தாக்கம் வளைகுடா தலைநகரங்களைத்தான் அழிக்கும் - ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் Bushehr அணு நிலையம் பலமுறை தாக்கப்பட்ட நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையான எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அவர், “கதிர்வீச்சின் தாக்கம் தெஹ்ரானை அல்ல, வளைகுடா நாடுகளின் (GCC) தலைநகரங்களைத் தான் அழிக்கும்” எனக் கூறியுள்ளார்.
Zaporizhzhia அணு நிலையம் அருகே நடந்த போருக்கான மேற்கத்திய எதிர்ப்பை நினைவுபடுத்திய அவர், “இஸ்ரேல்-அமெரிக்கா எங்கள் Bushehr நிலையத்தை நான்கு முறை தாக்கியுள்ளது” என குற்றம் சாட்டினார்.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஈரானின் பெட்ரோ இரசாயன நிலையங்கள் குறிவைக்கப்பட்டிருப்பது, “அமெரிக்கா-இஸ்ரேலின் உண்மையான நோக்கங்களை வெளிப்படுத்துகிறது” என அராக்சி கூறியுள்ளார்.

பிப்ரவரி 28 முதல் தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதல்களில் இதுவரை 1,340 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி உட்பட பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் தரப்பிலிருந்து இஸ்ரேல், ஜோர்டான், ஈராக் மற்றும் அமெரிக்க தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
Bushehr அணு நிலையம் மீதான தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் வெளியுறவு அமைச்சரின் எச்சரிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய அபாயத்தை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#IranWar #Bushehr #NuclearFallout #GCC #MiddleEastCrisis #USIsraelConflict #GlobalPolitics