ஹார்முஸில் விதிகளை மீறும் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை - 45 கப்பல்கள் கருப்பு பட்டியலில் சேர்ப்பு
Iran warns ships in Hormuz with fines seizure: ஹார்முஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
45 கப்பல்கள் கருப்பு பட்டியலில் சேர்ப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் விதிகளை மீறிய 45 எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களை ஈரான் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

இந்தக் கப்பல்கள் ஈரானின் அனுமதி இல்லாமல் கடல்சாலையை கடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விதிகளை மீறும் கப்பல்களுக்கு எச்சரிக்கை
ஈரான் அமைத்துள்ள புதிய “பெர்ஷியன் கல்ஃப் ஸ்ட்ரெய்ட் ஆத்தாரிட்டி” (Persian Gulf Strait Authority) அறிவிப்பின்படி, இந்தக் கப்பல்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம், தடுத்து வைக்கப்படலாம், மேலும் அவற்றின் சரக்குகள் பறிமுதல் செய்யப்படலாம்.
கருப்புப் பட்டியலில் உள்ள கப்பல்களுடன் தொடர்பு கொண்டு சரக்குகளை மாற்றும் பிற கப்பல்களும் அதே தண்டனையை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (ADNOC), சவுதி அரேபியாவின் தேசிய கப்பல் நிறுவனம் (Bahri), தென் கொரியாவின் Sinokor உள்ளிட்ட பல நிறுவனங்களின் கப்பல்கள் இடம்பெற்றுள்ளன.
ஈரான், ஹார்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்கள் தன்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும், பாதுகாப்பு மற்றும் சேவைக்கான கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
இதே நேரத்தில், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கத் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளது. உலகின் தினசரி எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையின் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் நீரிணையின் வழியாகவே சென்றுகொண்டிருந்தது.
ஆனால் ஈரான்-அமெரிக்கா மோதலால் அந்தப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை பாதுகாப்புடன் சில கப்பல்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
தற்போது ஈரானின் இந்த நடவடிக்கை, ஏற்கனவே நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |