ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியாக பழிவாங்கப்படுவார்: எச்சரிக்கும் ஈரான்
ஈரான் மீது வெடிகுண்டு வீசும் முடிவுக்கு வந்தால், உறுதியாகவும் துரிதமாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் பழிவாங்கப்படுவார் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
துரிதமான நடவடிக்கை
ஈரான் ஒரு புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தாவிட்டால், முன்பு இல்லாத அளவுக்கு அதன் மீது குண்டு வீசுவோம் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஈரானின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய குறிப்பானது ஈரானிய செய்தித் தொடர்பாளர் ஒருவரால் சுவிஸ் தூதரிடம் வழங்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் அச்சுறுத்தலானது சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தை மீறும் செயலாகும் என ஈரானிய தூதர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு உறுதியான மற்றும் துரிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றே அந்த குறிப்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானின் குறிப்பை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதாக சுவிஸ் தூதர் உறுதி அளித்துள்ளதாகவே ஈரானின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் 7ம் திகதி ஈரானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், அணுசக்தி ஒப்பந்தம் முன்னெடுக்க இரண்டு மாத காலம் அவகாசம் அளித்திருந்தார். மட்டுமின்றி, அமெரிக்காவின் சலுகையை ஈரான் நிராகரித்து அதன் அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்தால் பேரழிவு விளைவுகள் ஏற்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார்.
அவசர முடிவுகள்
ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் நேரிடையாக பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாரில்லை என்றே அங்குள்ள நிர்வாகம் பதிலளித்திருந்தது. ஈரானின் இந்த முடிவு ஜனாதிபதி ட்ரம்பை கோபம் கொள்ள வைத்துள்ளது.
அத்துடன், ஈரான் மீது தாக்குதல் உறுதி என மிரட்டல் விடுத்தார். மட்டுமின்றி, ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் B-2 குண்டு வீச்சு விமானங்களை சாகோஸ் தீவுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் அமெரிக்காவின் இந்த அவசர முடிவுகள் கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி பதிலளித்துள்ளார்.
தற்போது ஈரானுக்கும் 2300 மைல்கள் தொலைவில் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தாக்குதல் தொடுக்க வாய்ப்பிருப்பதால், ஈரானும் தயாராகி வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |