புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் அமெரிக்கா: சரியான பதிலடி கொடுக்கப்படும்: எச்சரிக்கை விடுத்த ஈரான்
அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவுக்கு பதிலடி
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையிலும், அவை மீறப்பட்டு இருநாட்டு படைகளும் தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்ந்து மீறப்படுவதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இருநாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டில் இருக்கும் இந்த நிலையிலும், பாரசீக வளைகுடாவில் நடைபெறும் சமீபத்திய சம்பவங்களை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிய செயலாகவே கருதப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய பேச்சுவார்த்தையில் தாக்குதலை எவ்வாறு நிறுத்துவது என்பதற்கு பதிலாக போரை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் பாரசீக வளைகுடாவில் ஒப்பந்தத்தை மீறி நடைபெறும் செயல்கள் மனித குலத்திற்கு எதிரானது மற்றும் இதற்கு ஈரான் தக்க பதிலடியை நிச்சயமாக வழங்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுடன் ஈரான் ஏற்கனவே 14 அம்ச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அதன் அடிப்படையிலேயே ஹார்முஸ் நீரிணையில் இருந்து அமெரிக்க கடற்படை கப்பல்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |