அமெரிக்காவை கணித சமன்பாடு மூலம் எச்சரிக்கும் ஈரான்
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர், கணித சமன்பாடு மூலம் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹார்மோஸை முற்றுகையிட உள்ள அமெரிக்கா
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதால் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் ஹார்மோஸ் நீரிணையில் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது எனவும், ஹார்மோஸ் நீரிணையை அமெரிக்க போர் கப்பல்கள் முற்றுகையிடப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரான் நரகத்திற்கு செல்லும் என எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே ஹார்மோஸ் நீரிணை முடக்கத்தால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு உள்ள நிலையில், ட்ரம்ப்பின் அறிவிப்பால் இந்த தட்டுப்பாடு தீவிரமடையும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த சூழலில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், கணித சமன்பாடு மூலம் எரிபொருள் விலை உயர்வு குறித்து எச்சரித்துள்ளார்.

கணித சமன்பாடு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கூகிள் மேப்பில் அமெரிக்காவில் பெட்ரோல் விலை உள்ள படத்துடன் "தற்போதைய பெட்ரோல் விலை நிலவரங்களைக் கண்டு மகிழுங்கள். 'தடை' என்று சொல்லப்படுவதால், விரைவில் நீங்கள் 4 – 5 டொலர் விலையுள்ள பெட்ரோலுக்காக ஏங்குவீர்கள். ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O)" என தெரிவித்துள்ளார்.
Enjoy the current pump figures. With the so-called 'blockade', Soon you'll be nostalgic for $4–$5 gas.
— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) April 12, 2026
ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O) pic.twitter.com/rVxlC6vFWG
இதில் BSOH என்பது ஹார்மோஸ் நீரிணையின் முற்றுகை(Blockade strait of hormuz).
ΔO_BSOH > 0 = எண்ணெய் விநியோகம்/விலைகள் (O) மீதான அந்த முற்றுகையின் விளைவில் ஏற்படும் அதிகரிப்பு.
(f(O)) > f(O) என்பதில் f என்பது சந்தையின் எதிர்வினைச் சார்பு. ஆரம்ப விலை அதிர்ச்சி f(O), இரண்டாம் நிலை விளைவுகளான f(f(O)) ஆல் மேலும் தீவிரமடைந்து, எரிவாயு விலைகளை இன்னும் அதிகமாக உயர்த்துகிறது.
ஹோர்முஸ் நீரிணையின் இறுக்கமான பிடியை மேலும் இறுக்கினால், அமெரிக்காவில் பெட்ரோல் விலைகள் தற்போதைய 4–5 டொலர் என்பதை தாண்டி மிக அதிகமாக உயரும் என குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |