இறந்து 47 வருடங்கள் ஆகிறது... பயப்படப் போவதில்லை: ஈரானில் இடி முழக்கமான பெண்ணின் குரல்
அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை ஒடுக்குவதற்கான முயற்சிகளை ஈரான் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆட்சியை எதிர்க்கும் வயதான பெண் ஒருவரின் காணொளி கவனத்தை ஈர்த்து வருகிறது.
இறந்து 47 வருடங்கள்
பொருளாதார நெருக்கடி மற்றும் வளர்ந்து வரும் பொதுமக்களின் கோபத்தால் உந்தப்படும் நாடு தழுவிய போராட்டத்தின் அடையாளமாகவும் குறித்த பெண்மணி மாறியுள்ளார்.

தொடர்புடைய காணொளியில், இரவு நேரப் போராட்டத்தின்போது, வாயிலிருந்து இரத்தம் வழிய அந்தப் பெண், தெஹ்ரானின் தெருக்களில் அணிவகுத்துச் சென்று அரசாங்க எதிர்ப்பு முழக்கங்களை எழுப்புவதைக் காணலாம்.
அதில் அவர், பயப்படப்போவதில்லை, நான் இறந்து 47 வருடங்கள் ஆகிறது என முழக்கமிட்டுள்ளார். ஆனால், அந்தப் பெண்ணின் வாயிலிருந்து வழியும் சிவப்பு திரவம் ரத்தமா அல்லது அவர் எதிர்ப்பின் அடையாளமாக ஏதாவது வண்ணப்பூச்சைப் பயன்படுத்துகிறாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.
ஈரானின் இஸ்லாமிய ஆட்சி 47 ஆண்டுகளுக்கு முன்பு 1979 இஸ்லாமியப் புரட்சியுடன் தொடங்கியது, மேற்கத்திய சார்பு ஷா முகமது ரெசா பஹ்லவியின் ஆட்சி பறிக்கப்பட்டது. அத்துடன் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி தலைமையிலான ஷியா இஸ்லாமிய மத அடிப்படையிலான ஆட்சி நிறுவப்பட்டது.
ஈரானின் தற்போதைய உயர் தலைவரான செய்யித் அலி ஹொசைனி கமேனி, இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனியின் பேரன் ஆவார்.

பட்டத்து இளவரசர்
தற்போது ஈரானில் இடி முழக்கமாக மாறியுள்ள அந்தப் பெண்ணின் காணொளியை இணையத்தில் பகிர்ந்துள்ள ஈரானிய-அமெரிக்க பத்திரிகையாளரும் ஆர்வலருமான மாசி அலினெஜாத் தெரிவிக்கையில்,
இது ஈரானில் இஸ்லாமியக் குடியரசை வெறுத்துப்போன ஒரு பெண்ணின் குரல் என பதிவிட்டுள்ளார். ஈரானிய நாடுகடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் அழைப்பு விடுத்த இரவு நேர ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்கள் வீதியில் திரண்டதை அடுத்து, ஈரான் அரசாங்கம் அந்நாட்டின் இணையம் மற்றும் சர்வதேச தொலைபேசி தொடர்புகளைத் துண்டித்துள்ளது.

ஈரான் முழுவதும் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வெடித்த ஆர்ப்பாட்டங்கள் வியாழக்கிழமையும் தொடர்ந்தன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பல சந்தைகள் மற்றும் கடைகள் மூடப்பட்டன.
இதுவரை, ஆர்ப்பாட்டங்கள் தொடர்புடைய வன்முறையில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 2,270 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |