ஈரானே நினைத்தாலும் ஹார்மோஸை திறப்பதில் சிக்கல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல்
ஈரானே நினைத்தாலும் ஹார்மோஸை நீரிணையை உடனடியாக திறப்பதில் சிக்கல் உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹார்மோஸ் நீரிணை
அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஹார்மோஸ் நீரிணையை மூடியது.

உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் இந்த பாதை வழியே நடைபெறுவதால், இதனால் பல்வேறு உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டன.
இதனால் ஹார்மோஸ் நீரிணையை திறக்க நட்பு நாடுகள் போர் கப்பல்களை அனுப்ப வேண்டும் என அறிவித்தார். ஆனால் எந்த நாடும் முன்வரவில்லை.
கன்னி வெடி
ஹார்மோஸ் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும் என டிரம்ப் அறிவித்த நிலையில், சிறிய படகுகள் மூலம் ஹார்மோஸ் நீரிணையில் ஈரான் கன்னி வெடிகளை பதிக்க தொடங்கியது.
ஹார்மோஸ் நீரிணையை திறக்காவிட்டால், ஈரான் முழுவதுமாக அழிக்கப்படும் என டிரம்ப் கெடு விதித்த நிலையில், பாகிஸ்தானின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்கா போர் நிறுத்தத்தை அறிவித்தது.
ஆனால், தற்போதும் ஹார்மோஸ் நீரிணையை திறக்காமல் கப்பல்கள் செல்ல மாற்று பாதையை அறிவித்துள்ளது ஈரான். இதற்கான காரணத்தை அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் கன்னி வெடிகளை பதிக்கும் போது, அது எந்த இடத்தில் பதித்தது என்பதனை பதிவு செய்யவில்லை. மேலும், சில நகரும் கன்னி வெடிகளை பதித்துள்ளனர்.
தற்போது அதை கண்டுபிடித்து அகற்றுவதற்கான தொழில்நுட்பம் ஈரானிடம் குறைவாகவே உள்ள நிலையில், அதை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால்தான் ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த் ரவஞ்சி, "தொழில்நுட்ப வரம்புகளை மனதில் கொண்டு" ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்படும் என்று சமீபத்தில் கூறினார்.
இருப்பினும், பிரித்தானியா அத்தகைய கண்ணிவெடிகளை அகற்றுவதற்குத் தேவையான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது என கூறப்படுகிறது.
ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை
போர் நிறுத்த கோரிக்கைகளில் ஹார்மோஸ் நீரிணை தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் இருக்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும், ஹார்மோஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தையும் ஈரான் வைத்துள்ளது.

ஹார்மோஸ் நீரிணையை முழுவதுமாக திறந்தால் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை நீக்குவதாக அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |