வெளிநாட்டில் கைதாகி மரணமடைந்த இளம்பெண்... தூதரகம் முற்றுகை: போர்க்களமான லண்டன் நகரம்

London Iran
By Arbin Sep 26, 2022 06:52 AM GMT
Report

வெஸ்ட்மின்ஸ்டரில் அமைந்துள்ள ஈரானிய தூதரகத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.

போராட்டம் நடந்த பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரிவு 35 உத்தரவு அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

லண்டனில் ஈரானிய தூதரகத்தை முற்றுக்கையிட்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களால் பொலிஸ் அதிகாரிகள் காயம்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் ஈரானிய தூதரகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பொலிஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் கைதாகி மரணமடைந்த இளம்பெண்... தூதரகம் முற்றுகை: போர்க்களமான லண்டன் நகரம் | Iranian Embassy Protesters Outside Officers

@PA

ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், நூற்றுக்கணக்கானோர் வெஸ்ட்மின்ஸ்டரில் அமைந்துள்ள ஈரானிய தூதரகத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.

இதில் போத்தல்கள் உள்ளிட்டவையை வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அதிகாரிகள் பலர் காயம்பட்டதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி இதுவரை 12 பேர் கைதாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போராட்டம் நடந்த பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரிவு 35 உத்தரவு அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் கைதாகி மரணமடைந்த இளம்பெண்... தூதரகம் முற்றுகை: போர்க்களமான லண்டன் நகரம் | Iranian Embassy Protesters Outside Officers

@getty

மேலும், கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணிகள் துவங்கப்படும் எனவும், கண்டிப்பாக அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தூதரக முற்றுகையானது ஈரானில் தொடரும் போராட்டங்களின் எதிரொலி என்றே தெரியவந்துள்ளது. ஈரானில் ஹிஜாப் தொடர்பாக அமுலில் இருக்கும் விதிகளை பின்பற்றாததை குறிப்பிட்டு 22 வயது மஹ்ஸா அமினி கைது செய்யப்பட்டார்.

ஆனால், பொலிசார் மேற்கொண்ட கடும் விசாரணைக்கு பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்று, பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இச்சம்பவம் ஈரான் மொத்தமும் கொந்தளிக்க செய்ததுடன்,

வெளிநாட்டில் கைதாகி மரணமடைந்த இளம்பெண்... தூதரகம் முற்றுகை: போர்க்களமான லண்டன் நகரம் | Iranian Embassy Protesters Outside Officers

@REX

பெண்கள் தங்கள் ஹிஜாப் உடைகளை பொதுவெளியில் வைத்து கொளுத்தியதுடன், தலைமுடியை துண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர். நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US