ஈரானுடன் போர் நிறுத்தம் தோல்வியுற்றால்... கொலைப்பட்டியலை உருவாக்கியுள்ள அமெரிக்கா
ஈரானுடனான தற்போதைய போர் நிறுத்தம் முறிந்தால், அந்த நாட்டின் பலம்பொருந்திய துணை இராணுவப்படையின் மூத்த தளபதி உட்பட, பல இராணுவத் தலைவர்களைக் குறிவைக்கும் கொலைப்பட்டியலை அமெரிக்கா தயார் செய்து வருகிறது என்ற தகவல் கசிந்துள்ளது.
எரிசக்தி வசதிகள்
கசிந்துள்ளத் தகவலின் அடிப்படையில், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், ஹார்முஸ் நீரிணையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஈரானின் இராணுவப் பிரசன்னத்தை மையமாகக் கொண்ட அவசரகாலத் திட்டங்களைத் தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதில், ஈரானின் விரைவுத் தாக்குதல் படகுகளை இலக்கு வைப்பது, கண்ணிவெடிகளைப் புதைக்கும் கப்பல்கள் உட்பட ஹார்முஸ் நீரிணையில் அச்சுறுத்தலை உருவாக்கும் அனைத்தையும் எதிர்கொள்ள அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர்.
உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி வசதிகள் மீதான சாத்தியமான தாக்குதல்கள் உள்ளிட்ட திட்டங்களையும் இராணுவ அதிகாரிகள் வகுத்து வருகின்றனர். IRGC தளபதி அஹ்மத் வாஹிதியும் அமெரிக்கா இலக்கு வைத்துள்ள முதன்மையான நபர் என்றே தகவல் கசிந்துள்ளது.
வாஹிதி ஈரானின் உயர் தேசிய பாதுகாப்புக் குழுவில் செயல்பட்டு வருகிறார். ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கமேனி இன்னும் உத்தியோகப்பூர்வமாக ஊடகங்களில் தோன்றாத நிலையில், இந்த உயர் தேசிய பாதுகாப்புக் குழுவே தற்போது ஈரானை கட்டுப்படுத்துகிறது.
பதற்ற அதிகரிப்பாக
ஹார்முஸ் நீரிணையில் தாக்குதல் தொடுப்பது குறித்த திட்டம் வகுக்கப்பட்டாலும், கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்பான பாதையை விரைவாக மீட்டெடுக்காமல் போகலாம் என்ற அச்சத்தையும் அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், ஈரான் போரை மேலும் நீட்டிக்க அல்லது விரிவுப்படுத்த வேண்டுமா என்ற கேள்வியும் அமெரிக்க அதிகாரிகள் மட்டத்தில் எழுந்துள்ளது. ஈரானின் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல், ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் சர்ச்சைக்குரிய பதற்ற அதிகரிப்பாக அமையும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்கா ஏப்ரல் 13 அன்று ஈரானிய துறைமுகங்களுக்கு முற்றுகையை அமுல்படுத்தத் தொடங்கியதுடன், வியாழக்கிழமை நிலவரப்படி குறைந்தது 33 கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளது.

மட்டுமின்றி, பாரசீக வளைகுடாவிலிருந்து 2,000 மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் இரண்டு கப்பல்கள் உட்பட, குறைந்தது மூன்று கப்பல்களை அமெரிக்கப் படைகள் இடைமறித்துள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |