அமெரிக்க இராணுவ தளத்தை தாக்கி சுக்குநூறாக்கும் ஈரான் ஏவுகணைகள்! இணையத்தில் வெளியான திகிலூட்டும் கிராபிக்ஸ் வீடியோ
அமெரிக்க இராணுவ தளத்தை ஈரான் ஏவுகணைகள் மற்றும் கழுகுகள் தாக்குதல் நடத்தி அழிக்கும் திகிலூட்டும் கிராபிக்ஸ் வீடியோ யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரான் உயர்மட்ட தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று ஜனவரி 3ம் தேதி அனுஷ்டிக்கப்படும் நிலையில் நேற்று ஜனவரி 2ம் குறித்த கிராபிக்ஸ் வீடியோ யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.
சுலைமானி கொல்லப்பட்டதை ‘மிகவும் கோழைத்தனமான பயங்கரவாத செயல்’ என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து குறித்த வீடியோ வெளியிடப்பட்டது.
சுலைமானி படுகொலைக்கு காரணமானவர்களை நீதிக்கு கொண்டு வரும் வரை ஈரான் ஓய்வெடுக்காது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் ட்வீட்டில் உறுதியளித்துள்ளது.
139 வினாடிகளில் கணினி உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள், ‘The Great Revenge’ என அழைக்கப்படுகின்றன, குறித்த வீடியோவில் அடையாளம் தெரியாத பகுதியில் இருக்கும் அமெரிக்க இராணுவ தளத்தை நோக்கி ஏவுகணைகள் பாய்ந்து சென்றது தாக்குகிறது.
இராணுவ தளத்தில் பல்வேறு பகுதிகள் எரிந்து புகை வருவதற்கு மத்தியில் பல கழுகுகள் அமெரிக்க படைவீரர்களைத் தாக்குகின்றன.
இறுதியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட டிரம்ப் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, கழுகு ஒன்று கொல்லப்பட்ட அமெரிக்க வீரரின் உடலை தூக்கி வந்து அவரின் முன் போட்விட்டுச் செல்கிறது.
இதோ அந்த வீடியோ...