வரிசையாக பறந்த ஈரானின் ஏவுகணைகள்... நொடியிடையில் தப்பிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்
இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஈரான் முன்னெடுத்த ஏவுகணை தாக்குதலில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் ஒன்று நூலிழையில் தப்பியதாக பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதிரவைக்கும் காணொளி
செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் மீது சுமார் 180 ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இஸ்ரேல் மட்டுமின்றி, உலக நாடுகள் அனைத்தும் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் திகைத்துப் போனது.
இந்த நிலையிலேயே ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணம் நோக்கி பறந்த விமானம் ஒன்றின் விமானி அதிரவைக்கும் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளார். மட்டுமின்றி, ஈரான் ஏவுகணை தாக்குதலை முன்னெடுக்கும் முன்னர் விமானம் பறக்க தடை ஏதும் அறிவிக்கப்படவும் இல்லை.
மேலும், ஈரானும் எச்சரிக்கை ஏதும் விடுக்காமல் ஏவுகணை தாக்குதலை முன்னெடுக்க, பல விமான சேவைகள் தங்கள் பாதைகளை மாற்றிக்கொண்டனர். வெளியான தரவுகளின் அடிப்படையில்,
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான வான்வெளியில் மட்டும் ஏவுகணை தாக்குதல் நடந்த போது விமானங்கள் பறக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பாரிஸ் நகரில் இருந்து மும்பை நகருக்கு புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று சுமார் 4 மணி நேரம் பறந்த பின்னர், ஏவுகணை தாக்குதலை அடுத்து மீண்டும் பாரிஸ் திரும்பியுள்ளது.
இதனால் அந்த விமானமானது 4 மணி நேர தாமதமாக மீண்டும் புறப்பட்டுள்ளது. மேலும், Airbus A350 விமானம் ஒன்று துருக்கி மற்றும் ஈராக் எல்லையை நெருங்கும் போது ஈரான் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்ததாகவும், இதனால் அந்த விமானத்தின் பாதையும் தடைபட்டதாக கூறப்படுகிறது.
குறைந்தபட்சம் அக்டோபர் 8 வரை
இந்த நிலையில் பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் நகரங்களுக்கான விமானங்கள் குறைந்தபட்சம் அக்டோபர் 8 வரை மீண்டும் தொடங்கப்படாது என்று ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
ஈரான் ஏவுகணை தாக்குதலின் போது நூலிழையில் தப்பிய நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், பயணிகளின் பாதுகாப்பு என்பது எப்பொழுதும் எங்களின் மிக உயர்வான முன்னுரிமைகளில் ஒன்று,
அதற்கேற்ப எங்களது செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்து சரிசெய்கிறோம் என தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை ஈரான் முன்னெடுத்த தாக்குதலில், 90 சதவிகித இலக்குகள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் F-35 போர் விமானங்கள் பல மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறை தலைமையகத்திற்கு அருகில் உள்ள பகுதியும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |