இந்திய தேசிய கீதத்தை சந்தூர் இசைக் கருவியில் வாசித்து மிரள வைத்த ஈரானிய சிறுமி!
ஈரானிய சிறுமி ஒருவர் சந்தூர் என்ற இசைக் கருவியில் இந்திய தேசிய கீதத்தை இசைத்து அசத்தியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
சந்தூர் இசைக் கருவியில், குச்சியின் நுனியில் கோலி போன்ற அமைப்பின் மூலம், கம்பிகளைத் தட்டி தட்டி இந்திய தேசிய கீதத்தை வாசித்து, அந்த அயல்நாட்டு சிறுமி அசத்தியுள்ளார்.
13 வயதே ஆகும் இந்த ஈரானிய இச்சிறுமியின் பெயர் தாரா காரேமணி (Tara Ghahremani).
மதத்தால், இனத்தால், தேசத்தால், மொழியால் வெவ்வேறாக இருந்தாலும், நமது தேசிய உணர்வை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியதால், பல வேற்றுமைகள் கடந்து நம்முள் ஒருவராகிறார் இந்த சிறுமி' என, தேசபக்தி மிகுந்தவர்கள் சிறுமியைப் பாராட்டி வருகின்றனர்.
Young Iranian artist, Tara Ghahremani gives soulful santoor rendition of ?? National Anthem, on the eve of 75th Independence Day #AmritMahotsav #IndiaAt75 @AmritMahotsav @MEAIndia @iccr_hq pic.twitter.com/YwrnnkbOBL
— India in Iran (@India_in_Iran) August 14, 2021
இந்த வீடியோ கடந்த மார்ச் மாதமே இணையத்தில் பதிவேற்றப்பட்டு இருந்தாலும், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மீண்டும் இது வைரலாகியுள்ளது. உலகம் முழுக்க வாழும் இந்தியர்கள், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பிரபலப்படுத்தி உள்ளனர்.
Music by tara.santoor...
— Somakala Viswakarma (@SomakalaVM) August 15, 2021
Video credit
@TaraGhahRemani insta pic.twitter.com/VyAnbxGVnS