சந்தேகங்களுக்கு மத்தியில் மொஜ்தபா கமேனியின் விடியோவை வெளியிட்ட ஈரான்
ஈரானின் புதிய உச்சத்தி தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், ஈரானிய அரசு ஊடகங்கள் அவர் மத ஆய்வுகளை கற்பிக்கும் காணொளியை வெளியிட்டுள்ளன.
56 வயதான மொஜ்தபா, பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அலி கமேனியின் மகனாக, ஈரானின் உச்சத் தலைவராக பொறுப்பேற்றார்.
ஆனால், போரின் தொடக்கத்திலிருந்து அவர் பொதுமக்கள் முன்னிலையில் தோன்றாததால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.
காணொளியில் அவர் மாணவர்களுக்கு அரபியில் மத பாடம் கற்பிக்கிறார். அனால் இந்த பதிவு எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவலை IRIB வெளியிடவில்லை. இதனால் இது பழைய கட்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சில ஊடகங்கள், அவர் தாக்குதலில் காயமடைந்ததாகவும், சில அமெரிக்க ஊடகங்கள் அவரது முகம் சிதைந்திருக்கலாம் அல்லது கோமாவில் இருக்கலாம் என்றும் கூறுகின்றன.
கத்தார் ஊடகம் அவர் மாஸ்கோவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கூட, "அவர் உயிருடன் உள்ளாரா என்பது தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மொஜ்தபா கமேனி தனது அதிகாரப்பூர்வ Telegram சேனலில் வெளியிட்ட செய்தியில், நாங்கள் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் எதிரிகள் விலை கொடுக்கவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.
இந்த வீடியோ வெளியீடு, அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களை தீர்க்குமா அல்லது மேலும் கேள்விகளை எழுப்புமா என்பது உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mojtaba Khamenei health, Iran Supreme Leader video, Mojtaba Khamenei Moscow treatment #Iran #MojtabaKhamenei #IranWar