ஈரானின் “ஆபரேஷன் லைட்னிங்” தாக்குதல்: பஹ்ரைனை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்
பஹ்ரைனில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்
பஹ்ரைனில் அமெரிக்க படைகள் பயன்படுத்தும் ஷேக் ஈசா விமான தளத்தை(Sheikh Isa Air Base) குறிவைத்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக சனிக்கிழமை அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஈரானிய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஆபரேஷன் லைட்னிங்(Operation Lightning) என்ற நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட பதினைந்தாவது தாக்குதல் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் விமானம் நிறுத்தும் உள்கட்டமைப்பு, வாகனம் நிறுத்துமிடம், எரிபொருள் சேமிப்பு கிடங்கு ஆகியவை அழிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஈரானிய படைகளின் இந்த தாக்குதலில், பஹ்ரைனில் உள்ள சில முக்கிய பாலங்கள் சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அழிவுத்திறன் கொண்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

கடந்த 7 நாட்களாக அமெரிக்க படைகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும் உலகளாவிய அகங்காரத்தின் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |