வெளிநாட்டு தம்பதிக்கு ஜேர்மனியில் சிறை: பின்னணி
யாஸிடிகள் என்னும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஈராக் நாட்டவர்களான ஒரு தம்பதிக்கு ஜேர்மனியில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த தம்பதி
2015க்கும் 2017க்கும் இடையில் ஐ எஸ் அமைப்பு, யாஸிடிகள் என்னும் சிறுபான்மை இனத்தவரை இனப்படுகொலை செய்தபோது, ஈராக் நாட்டவர்களான ட்வானா (Twana H.S.) மற்றும் ஆசியா (Asia R.A.) என்னும் தம்பதியர், யாஸிடி இனத்தவர்களான 5 மற்றும் 12 வயதுள்ள இரண்டு சிறுமிகளை அடிமைகளாக வாங்கியுள்ளார்கள்.

அந்த தம்பதியர் அந்த பிள்ளைகளை கடினமாக வேலை வாங்கியதுடன், சித்திரவதையும் செய்த நிலையில், ட்வானா அந்தச் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ய, கணவருக்கு உதவியாக செயல்பட்டுள்ளார் ஆசியா.
2024ஆம் ஆண்டு ட்வானா, ஆசியா தம்பதியர் பவேரியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனித இனத்துக்கெதிரான குற்றங்கள் மற்றும் சிறுபிள்ளைகளை சீரழித்தல், அதற்கு உதவுதல் ஆகிய விடயங்களில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, ட்வானாவுக்கு ஆயுள் தண்டனையும், ஆசியாவுக்கு ஒன்பதரை ஆண்டுகள் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்படும் வகையில் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயலில் ஈடுபடும்போது ஆசியா 20 வயதுக்குக் குறைவானவராக இருந்ததால் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |