ரஷ்ய பாஸ்போர்ட்டில் நுழைந்த பெண்: கடத்தப்பட்டு 2 ஆண்டுகள்..விடுவிப்பதாக அறிவித்த பிரதமர்
ரஷ்ய பெண் எலிசபெத் சுர்கோவை விடுவிப்பதாக ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி அறிவித்துள்ளார்.
பாக்தாத்தில் கடத்தப்பட்ட பெண்
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ரஷ்ய கல்வியாளர் எலிசபெத் சுர்கோவ்.
இவர் முனைவர் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக ஈராக்கிற்குப் பயணம் செய்துள்ளார்.
தனது ரஷ்ய பாஸ்போர்ட்டில் ஈராக்கிற்குள் நுழைந்திருக்க வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது. ஆனால், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்ற பெண் பாக்தாத்தில் கடத்தப்பட்டார்.
அப்போது அவரது கடத்தலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. அதே சமயம் எலிசபெத் சுர்கோவை Kataeb Hezbollah வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
ஈராக் பிரதமர் முகமது ஷியா
இந்த நிலையில், சுர்கோவை விடுவிப்பதாக ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி (Mohammed Shia al-Sudani) அறிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப்பும் இதனை கூறியுள்ளார்.
சூடானி இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், "பல மாதங்களாக எங்கள் பாதுகாப்பு சேவைகள் மேற்கொண்ட விரிவான முயற்சிகளின் உச்சக்கட்டமாக, ரஷ்யரான எலிசபெத் சுர்கோவை விடுவிப்பதாக நாங்கள் அறிவிக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் ட்ரம்ப், பல மாதங்களாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர், சக்திவாய்ந்த ஈரான் சார்பு Kataeb Hezbollah குழுவால் விடுவிக்கப்பட்டார் என்றும், தற்போது பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அவர் இருப்பதாகவும் தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |