ஈராக் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக்கொலை! வைரலான அதிர்ச்சி வீடியோ
ஈராக்கில் பெண் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டிக்டோக் பிரபலம்
ஈராக் நாட்டில் குஃப்ரான் மஹ்தி சவாதி எனும் பெண் டிக்டோக்கில் பிரபலமானவர்.
''ஓம் பஹத்'' என்று சமூக வலைத்தளங்களில் அழைக்கப்பட்ட இவர், நாட்டின் கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீடியோக்களை டிக்டோக்கில் பதிவேற்றிய குற்றத்திற்காக கடந்த ஆண்டு 6 மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.
இந்த நிலையில் ஓம் பஹத் தனது காரில் அமர்ந்திருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார்.
வீடியோ
இதில் ஓம் பஹத் ரத்த வெள்ளத்தில் சரிந்து காரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.
உணவு விநியோகம் செய்பவர் போல் வந்து குறித்த மர்ம நபர் இந்தக் கொலைச்சம்பவத்தை அரங்கேற்றியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Iraqi social media star ‘Influencer’ Om Fahad was assassinated yesterday by Iranian militias of the Hashd Al Shaabi (PMF) today in Baghdad (Iraq)
— Cyprian, Is Nyakundi (@C_NyaKundiH) April 27, 2024
She didn’t engage in politics or similar but was often attacked by these factions for her ‚liberal lifestyle‘ pic.twitter.com/BgfOBK7pMr
மேலும், இச்சம்பவத்தில் மற்றொரு பெண் காயமடைந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் குஃப்ரான் மஹ்தி சவாதியின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்புக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் குஃப்ரான் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |