ஈராக் பிரதமரை படுகொலை செய்ய முயற்சி... இல்லம் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்!
ஈரான் பிரதமர் இல்லம் மீது ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா விமான் மூலம் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட பசுமை மண்டலத்தில் இருக்கும் பிரதமர் இல்லத்தின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் பிரதமர் இல்ல கட்டிடத்தை தாக்கியதில், 6 பாதுகாவலர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குலில் தனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தப்பியதாக தெரிவித்துள்ள ஈராக் பிரதமர் Mustafa al-Kadhimi, அனைவரும் அமைதியாக இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு தற்போது வரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஈராக் பிரதமரை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குலுக்கு ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.