பண்டிகை கால ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி - எப்படி பெறுவது?
பண்டிகை கால ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்குவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் டிக்கெட்டில் 20% தள்ளுபடி
இந்தியாவில் ரயில் மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில், பெருமளவிலான பயணிகள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
இதனை முன்னிட்டு, Round Trip Package என்ற 20 சதவீத தள்ளுபடி திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், பயணிகள் ஒரு இடத்தில் இருந்து ரயில் மூலம் மற்றொரு இடத்திற்கு சென்று பின்னர் மீண்டும் அதே இடத்திற்கு வருவதற்கும் ரயில் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது Round Trip Booking எனப்படும்.
எப்படி பெறுவது?
இதில், திரும்பி வர முன்பதிவு செய்யும் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி திரும்ப வரும் டிக்கெட்டின் அடிப்படை கட்டணத்திற்கு மட்டுமே பொருந்தும்.
இதற்கான முன்பதிவுகள் 14 ஆகஸ்ட் 2025 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 13 முதல் அக்டோபர் 26 வரை புறப்படும் ரயில்கள் மற்றும் 17 நவம்பர் முதல் டிசம்பர் 1 வரை திரும்ப வரும் ரயில்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் பொருந்தும்.
இந்த தள்ளுபடி சிறப்பு ரயில்கள் உட்பட ரயிலின் அனைத்து வகுப்புகளுக்கும் பொருந்தும்.
அதேவேளையில், புறப்படும் போது உள்ள பயணிகளின் எண்ணிக்கையும் திரும்பி வரும் போது உள்ள பயணிகளின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும். பயணிகளின் விவரங்களும் ஒன்றாக இருக்க வேண்டும்.
மேலும், உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்களுக்கு மட்டுமே இந்த கட்டண சலுகை பொருந்தும். காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு பொருந்தாது.
இதில், பயண கூப்பன்கள், பாஸ்கள், வவுச்சர்கள், PTO போன்ற சலுகைகள் இதில் பொருந்தாது.
மேலும், முன்பதிவு செய்யப்பட்ட பின்னர் பயணத்தை மாற்றவோ அல்லது பயணத்தை ரத்து செய்து பணத்தை திரும்ப பெறவோ முடியாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |