iRecorder App பயன்படுத்துபரா நீங்கள்; இனி கவனமாக இருங்க!
iRecorder App ஆனது பயனாளர்களின் அனுமதியின்றி ஓடியோக்களை Record செய்து பதிவேற்றி வருவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளன.
iRecorder App
இந்த App ஆனது முதன்முதலில் செப்டம்பர் 2021 இல் வெளியிடப்பட்டது.
இது ஒரு காலத்தில் முறையான Android பயன்பாடாக இருந்தது. ஆனால் தற்போது ஆபத்தான Android remote access Trojan (RAT) ஆக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவலை ESET இன் Cyber பாதுகாப்பு வல்லுநர்கள் கண்டுப்பிடித்துள்ளார்கள்.
இதன் பாதிப்பு
இந்த App பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி Cyber குற்றவாளிகளுடன் பகிர்ந்துக்கொள்கின்றது. அதாவது அந்த App பயன்படுத்துவர்களின் வீடியோக்களை வேறொருவருடன் பகிர்ந்து வருவது தெரியவந்துள்ளது.
ஆகவே இந்த App Google App Store இல் இருந்து நீக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு இருந்தாலும் iRecorder App யை அங்கீகரிக்கப்படாத செயலிகள் மூலம் பெற்றுக்கொள்கின்றார்கள் எனவும் பல தகவல்கள் வெளியாகிவுள்ளன. ஆகவே எச்சரி்கையுடன் செயற்பட வேண்டும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அடைய இன்று பயனுள்ளதாகத் தோன்றுவது நாளை அச்சுறுத்தலாக மாறும்.
ஆகவே இதுபோன்று தீங்கிழைக்கும் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியமாகிறது.