நேருக்கு நேர் மோதிக் கொண்ட கார்கள்: 20 வயதுடைய 5 இளைஞர்கள் உயிரிழப்பு
அயர்லாந்தில் ஏற்பட்ட மோசமான இரண்டு கார் விபத்தில் 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்து
அயர்லாந்தின் கோ லூத்(Co.Louth) கவுண்டியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மோசமான சாலை விபத்தில் 5 இளைஞர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டன்டால்க்(Dundalk) அருகில் உள்ள கிப்ஸ்டவுனின்(Gibstown) L3168 சாலையில் இரவு 9.00 மணிக்கு இரண்டு கார்கள் மோதிக்கொண்ட இந்த பயங்கரமான விபத்தில் 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த 5 பேரில், 20 வயதுடைய 3 ஆண்களும், 2 பெண்களும் அடங்குவர் என்றும். அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த அனைவரும் போக்வேகன் கோல்ஃப்(volkswagen Golf) காரில் பயணித்தவர்கள் என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

போக்வேகன் கோல்ஃப் காரில் பயணித்த மற்றொரு நபர் படுகாயங்களுடன் அன்னை லூர்து மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் போக்வேகன் கோல்ஃப் கார், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காருடன் மோதி இந்த சோகம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்துக்கான காரணங்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |