குறுநகையை ஏற்படுத்திய அந்த சுவிஸ் பொலிஸ் நடன வீடியோவை நினைவிருக்கிறதா?: சவாலை ஏற்றது அயர்லாந்து
தொலைக்காட்சியை ஆன் செய்தாலும் சரி, பத்திரிகைகளை திறந்தாலும் சரி, எங்கு பார்த்தாலும் ஒரே கொரோனா செய்திகளாக மக்களை சோர்வடையச் செய்திருந்த நேரத்தில், கவலையை சற்றே புறம் தள்ளி, மக்களை ஒரு சில நிமிடங்கள் மகிழ வைக்கும் ஒரு நடன வீடியோவை வெளியிட்டனர் சுவிஸ் பொலிசார்.
பொலிசார் இணைந்து நடனமாடும் அந்த வீடியோவை பார்க்கும்போது, இதழோரம் குறுநகை ஒன்று பிறப்பதை தவிர்க்க இயலவில்லை.
எளிய அசைவுகளுடன் ஆண் மற்றும் பெண் பொலிசார் ஆடும் அந்த நடனம் மனதை மகிழச் செய்வதை மறுக்க முடியாது.
அந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்ட சுவிஸ் பொலிசார், அயர்லாந்து பொலிசாருக்கு சவால் ஒன்றை விடுத்தார்கள்.
We have stepped up to the Swiss police @fedpolCH #JerusalemaChallenge. Gardaí across Ireland answered the call to give the public we serve a lift in these challenging times. #StayTogether #homeStaySafe pic.twitter.com/sbLdkk54hB
— Garda Info (@gardainfo) February 2, 2021
தாங்கள் வெளியிட்டுள்ள அந்த நடன வீடியோ போதுமான முறை மறு ட்வீட் செய்யப்பட்டால், அயர்லாந்து பொலிசாரும் இதேபோல் நடனமாட முடியுமா என கேட்டிருந்தார்கள் சுவிஸ் பொலிசார்.
சுவிஸ் நடன வீடியோ மற்றும் சவால் குறித்த தகவல் அயர்லாந்தின் நீதித்துறையை எட்ட, பாரம்பரிய நடனத்துக்கு பேர் போன நாம் சும்மா இருக்கலாமா, நம் நாட்டை பெருமைப்படுத்துங்கள் என அனுமதியளிக்கப்பட, பொலிசார் நடன பயிற்சியில் இறங்கினார்கள்.
தற்போது, சுவிஸ் பொலிசாரின் சவாலுக்கு பதிலாக அயர்லாந்து பொலிசார் ஒரு நடன வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
வீடியோவின் முடிவில், வீடியோவை பார்வையிட்டதற்கு நன்றி, கலக்கமான இந்த நேரத்தில், இந்த வீடியோ உங்களை மகிழச்செய்திருக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்கள் அயர்லாந்து பொலிசார்.