காவல்துறை அதிகாரி மீது இடித்த திருடப்பட்ட கார்: துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரி
திருடப்பட்ட கார் மோதிய சம்பவத்தில் காவல்துறை அதிகாரி பலத்த காயமடைந்துள்ளார்.
காவல்துறை அதிகாரி மீது மோதிய கார்
ஞாயிற்றுக்கிழமை காலை 4.45 மணிக்கு வடக்கு அயர்லாந்தின் டவுன்பேட்ரிக் பகுதியில் உள்ள பவுண்டன் தெருவில் காவல்துறை அதிகாரிகளின் உத்தரவை மீறி கார் ஒன்று நிற்காமல் சென்றுள்ளது.
இதையடுத்து பொலிஸார் நடத்திய துரத்தல் மற்றும் தேடுதல் நடவடிக்கையின் இறுதியில், பாலிமோட் வாக் பகுதியில் நிற்காமல் சென்ற வாகனம் கண்டறியப்பட்டது. மேலும் அதிலிருந்து ஒருவர் தப்பி ஓடிய நபரை காவல்துறை அதிகாரிகளும் துரத்தி சென்றனர்.
ஒரு கட்டத்தில் தங்களுடைய காவல்துறை வாகனத்திற்கு திரும்பிய அதிகாரிகள், அதில் ஏற்கனவே ஒரு நபர் இருக்கையில் அமர்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அத்துடன் காவல்துறை அதிகாரிகளை நோக்கி அந்த மர்ம நபர் காரை வேகமாக செலுத்த முயற்சித்துள்ளார்.
அப்போது அவரை தடுப்பதற்காக காவல்துறை அதிகாரி தன்னுடைய துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இருப்பினும் அந்த வாகனம் அவர் மீது மோதி உயிருக்கு ஆபத்தான காயத்தை ஏற்படுத்தியது. தற்போது அந்த அதிகாரி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உதவி தலைமை காவல் அதிகாரி மெலனி ஜோன்ஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
27 வயது நபர் கைது
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 27 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல் வாகனம், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தடயவியல் ஆய்விற்காக பொலிஸார் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |