ஐந்து பந்துகளில் 5 விக்கெட்! புதிய வரலாறு படைத்த பந்துவீச்சாளர்
அயர்லாந்தில் நடந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் கார்டிஸ் காம்பர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
கர்டிஸ் காம்பர் அதிரடி
Inter-Provincial டி20 தொடர் போட்டியில் முன்ஸ்டர் மற்றும் நார்த் வெஸ்ட் அணிகள் மோதின.
முதலில் துடுப்பாடிய முன்ஸ்டர் அணி 188 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் கர்டிஸ் காம்பர் (Curtis Campher) 24 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய நார்த் வெஸ்ட் அணி 13.3 ஓவரில் 88 ஓட்டங்களுக்கு சுருண்டது. கர்டிஸ் காம்பர் தொடர்ச்சியாக 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
புதிய வரலாறு
12வது ஓவரின் 5வது, 6வது பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், 14வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதன்மூலம் டி20யில் தொடர்ச்சியாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற புதிய வரலாற்றை காம்பர் படைத்தார்.
மொத்தம் 2.3 ஓவர்கள் மட்டுமே வீசிய காம்பர், 16 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |