ஜேர்மனியில் தாக்கப்பட்ட அயர்லாந்து நாட்டு இளம்பெண்: பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவம்
ஜேர்மனியில், அயர்லாந்து நாட்டுப் பெண்ணொருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தாக்கப்பட்ட அயர்லாந்து நாட்டு இளம்பெண்
வியாழக்கிழமையன்று, ஜேர்மன் தலைநகர் பெர்லினில், காசாவில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அப்போது, அயர்லாந்து நாட்டவரான கிட்டி ஓ ப்ரையன் (Kitty O'Brien, 25) என்னும் இளம்பெண் ஜேர்மன் பொலிசாரால் தாக்கப்பட்டுள்ளார்.
பொலிசார் இரண்டு முறை அவரது முகத்தில் குத்தியதுடன், மூக்கிலிருந்து இரத்தம் கொட்டும் நிலையிலும், அவரை கைகளைப் பிடித்து முறுக்கி இழுத்துச் சென்றதாகவும், அதில் அவரது கை எலும்பு உடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ள கிட்டிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பல நாட்கள் மருத்துவமனையில் செலவிடவேண்டியிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கவலை தெரிவித்துள்ள அயர்லாந்து தூதர்
கிட்டி தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஜேர்மன் அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ள அயர்லாந்து தூதரான Maeve Collins, கிட்டிக்கு நடந்த துயரம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து பிரதமரான Micheal Martinம், கிட்டி தாக்கப்பட்ட விடயம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ளதுடன், அவரும் கிட்டி தாக்கப்பட்டதற்கு கவலை தெரிவித்துள்ளார்.
ஆனால், தாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பலமுறை எச்சரித்ததாக தெரிவித்துள்ள பொலிசார், கிட்டி ஒத்துழைக்க மறுத்ததுடன் தங்களை மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், பொலிசாரை பலரை தாக்க முற்பட்டதாகவும் அதனால் வேறு வழியில்லாமல் பலத்தை பிரயோகிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
என்றாலும், சம்பந்தப்பட்ட பொலிசார் மீது விசாரனை துவக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |