குழந்தையின் பாலினத்தால் வெடித்த சர்ச்சை; பகிரங்க மன்னிப்பு கோரிய யூடியூபர் இர்ஃபான்
பிரபல யூடியூபர் இர்ஃபான் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை கூறி, நேற்று சர்ச்சையில் சிக்கினார்.
பகிரங்க மன்னிப்பு கோரிய இர்ஃபான்
சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகி வருகின்றனர். அதில் ஒருவர் தான் யூடியூபர் இர்ஃபான்.
ஒவ்வொரு நாளும் தவறாமல் தனது யூடியூப் சேனலில் வீடியோவை பதிவேற்றி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் பெற்றிருந்தார்.
இவரது சேனலில் பெரும்பாலான வீடியோக்கள் உணவு சார்ந்தே இருக்கும். பல உணவு விமர்சன வீடியோக்களை வெளியிடுவதே வழக்கம்.
இந்நிலையில் இவர் தனது மனைவி ஆல்யாவுடன் சேர்ந்து தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினத்தை விழாவாக கொண்டாடி வெளியில் கூறியுள்ளார்.
அந்த பரிசோதனை செய்வதற்கு இந்தியாவில் தடை என்பதால், துபாய் சென்று பரிசோதித்துள்ளனர். பின் வீடியோ மூலம் தனக்கு பெண் குழந்தை பிறக்கவிருப்பதையும் அறிவித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |