ரோபோ சங்கர் மறைவுக்கு இர்பான் பதான் இரங்கல்
நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல நகைச்சுவைக்கு கலைஞரும் திரைப்பட நடிகருமான ரோபோ சங்கர் வியாழக்கிழமை (செப் 18) இரவு 8.30 மணியளவில் காலமானார்.
படப்பிடிப்பின்போது திடீரென மயங்கி விழுந்த அவர், உடனே தனியார் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. அவர் ஏற்கெனவே வயிற்று பிரச்சினையால் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
ரோபோ சங்கரின் மரணத்திற்கு இரங்கல் தெறிவிக்க
ரோபோ சங்கரின் மறைவு தமிழ் திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், விக்ரமின் கோப்ரா திரைப்படத்தில் ரோபோ சங்கருடன் நடித்த அனுபவத்தை நினைவு கூர்ந்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "ரோபோ சங்கரின் மரணத்தை கேட்டு மனமுடைந்தேன். வெகு சீக்கிரமாக சென்றுவிட்டார். அவரது குடும்பத்திற்கு எனது இரங்கல்' என கூறியுள்ளார்.
Heartbroken to hear about Robo Shankar’s passing. Gone too soon. My condolences to his family. pic.twitter.com/reuElYIVcc
— Irfan Pathan (@IrfanPathan) September 19, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Robo Shankar Funeral, Robo Shankar death news, Robo Shankar passes away, Actor Robo Shankar death, Tamil Actor passes away, Vijay TV Fame Robo Shankar, Irfan Pathan Robo Shankar