நியாயமற்ற கொலைகளை நிறுத்த வேண்டிய நேரமிது! காசா குறித்து முன்னாள் இந்திய வீரர் உருக்கம்
காசாவில் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் வேதனை தெரிவித்துள்ளார்.
காசா மீது தாக்குதல்
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கையாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மேலும் காசாவில் பிரதான மருத்துவமனைக்கு வெளியே இருந்த ஆம்புலன்ஸ் கான்வாய் மீது இஸ்ரேலிய விமானம் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் காசாவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
இர்ஃபான் பதான் வேதனை
அவர் தனது பதிவில், 'இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரில் காசாவில் ஒவ்வொரு நாளும் 10 வயதிற்குட்பட்ட அப்பாவி குழந்தைகள் இறக்கிறார்கள். இதனைப் பார்த்தும் இந்த உலகம் அமைதியாக இருக்கிறது.
ஒரு விளையாட்டு வீரனாக, என்னால் பேச மட்டுமே முடிகிறது. உலக தலைவர்கள் ஒன்றுகூடி இந்த நியாயமற்ற கொலைகளை நிறுத்த வேண்டிய முக்கியமான நேரம் இது' என தெரிவித்துள்ளார்.
PTI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |