இர்ஃபான் செய்தது கொலை குற்றமில்லை.., தொப்புள் கொடி விவகாரத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
யூடியூபர் இர்ஃபான் மனைவி பிரசவ வீடியோ விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
இர்ஃபான் விவகாரம்
பிரபல யூடியூபர் இர்ஃபான், தனது மனைவியின் பிரவசத்தில் அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "இச்சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்.
இந்த விவகாரத்தில் மருத்துவ சட்ட விதிகளை இர்பான் மீறியுள்ளார். சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும்" என்று கூறியிருந்தார்.
அதன்படி, சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. மேலும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, யூடியூபர் இர்ஃபான் தொப்புள் கொடி விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து மருத்துவத்துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
மேலும், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு அனுமதியளித்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியது.
அமைச்சர் பேட்டி
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது கொலை குற்றமில்லை. மருத்துவமனைக்கு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 10 நாட்களுக்கு சேவை முடக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய விடயமா, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |