ஈரான் எண்ணெய் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா: இராணுவத்தினர் டேங்கரை கைப்பற்றும் காட்சி
ஈரான் தொடர்புடைய எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் எண்ணெய் கப்பல்கள் பறிமுதல்
ஈரானின் சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்க படைகள் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது.
இந்நிலையில் ஈரானின் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய மெஜஸ்டிக் எக்ஸ்(Majestic X) என்ற எண்ணெய் கப்பலை அமெரிக்க படைகள் அதிரடியாக கைப்பற்றியுள்ளனர்.
Overnight, U.S. forces carried out a maritime interdiction and right-of-visit boarding of the sanctioned stateless vessel M/T Majestic X transporting oil from Iran, in the Indian Ocean within the INDOPACOM area of responsibility.
— Department of War 🇺🇸 (@DeptofWar) April 23, 2026
We will continue global maritime enforcement to… pic.twitter.com/SWF6Jt9Ci4
ஹார்முஸ் ஜலசந்தியில் 3 கப்பல்களை ஈரான் புரட்சிகர காவல் படை சிறைபிடித்ததை அடுத்து இந்திய பெருங்கடல் பகுதியில் அமெரிக்க படை இந்த பறிமுதல் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ளது.
வெளியான வீடியோ ஆதாரம்
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க தற்காப்பு அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில், அமெரிக்க சிறப்பு படையினர் ஈரானின் Majestic X எண்ணெய் கப்பல் மீது ஏறி அதனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன் இதே பகுதியில் ஈரானின் டிபானி(Tifani) என்ற கப்பல் அமெரிக்க படைகளால் சிறைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல என்றும், ஈரானுக்கு எதிரான கண்காணிப்புகள் தீவிரமாக தொடரும் என்றும் அமெரிக்க தற்காப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
Us forces seizes Iranian Majestic X tanker
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |