வெளிநாடொன்றில் அமெரிக்கத் தளபதிகள் தங்கும் ஹொட்டல் ஒன்றை குறி வைத்த ஈரானின் IRGC
ஈரானில் பல வாரங்களாக நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் போது, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் காரணம் என்று ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இரு நாடுகளும் நேரடியாக
இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஈரானை உலுக்கிய போராட்டங்களின் போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடையவர்கள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி பல ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றனர் என்று காமெனி தெரிவித்துள்ளார்.

ஈரானில் நடந்த வன்முறையில் இரு நாடுகளும் நேரடியாக ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஒரு குற்றவாளி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய ஈரான் எதிர்ப்புப் போராட்டங்கள் வேறுபட்டது என்றும், அதில் அமெரிக்க ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளார் எனவும் அலி காமெனி கூறியதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கத்தாரில் அமெரிக்க உயர்மட்டத் தளபதிகள் பயன்படுத்தும் ஹொட்டல் ஒன்றை குறி வைத்துள்ளதாக ஈரானின் IRGC படை மிரட்டல் விடுத்துள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டால் அந்த நாடு பதிலடி கொடுக்கக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள இராணுவத் தளங்களில் இருந்து அமெரிக்கப் படைகள் சமீபத்தில் வெளியேற்றப்பட்டன.
இந்த நிலையிலேயே, கத்தாரில் உள்ள அமெரிக்கத் தளபதிகளுக்கு ஈரானின் IRGC படை மிரட்டல் விடுத்துள்ளது. மேலும், ஈரானுக்கு எதிராக ஏதேனும் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால்,
ஈரானின் ஆயுதப் படைகளின் தீர்க்கமான மற்றும் வலிமையான பதிலடியிலிருந்து மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரிகளின் இடமாற்றம் அவர்களை எந்த வகையிலும் பாதுகாக்காது என்றே IRGC தொடர்புடைய சமூக ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளில் இருந்து ட்ரம்ப் பின்வாங்கிய பிறகு, கத்தாரில் அமெரிக்கப் படைகளுக்கான அச்சுறுத்தல் நிலை பின்னர் குறைக்கப்பட்டது.
ஈரானில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை தூக்கிலிடுவது இராணுவ நடவடிக்கையைத் தூண்டக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்திருந்தார்.
அவர் ஒரு குற்றவாளி
இருப்பினும், ஈரான் தொடர்பான நிலைமை நிலையற்றதாகவே உள்ளது, அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு கூடுதல் இராணுவத் தளவாடங்களை அனுப்புவதை தீவிரப்படுத்தியுள்ளதாகவே கருதப்படுகிறது, இதில் விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுவும் அடங்கும்.
இந்த நிலையில், சமீபத்திய அமைதியின்மையின் போது, ஈரான் மீது ட்ரம்ப் நிர்வாகம் இழைத்த உயிரிழப்புகள், சேதங்கள் மற்றும் அவதூறுகளுக்கு அவர் ஒரு குற்றவாளி என்றே ஈரான் கருதுவதாக அலி காமெனி கூறியுள்ளார்.

சமீபத்திய வாரங்களில் ஈரான் முழுவதும் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் பரவியது, கட்டிடங்கள் தீப்பிடித்து எரிவதையும், பாதுகாப்புப் படையினருடனான வன்முறை மோதல்களையும் காட்டும் காணொளிக் காட்சிகள் வெளியாகின.
இந்தக் கலவரங்களின் போது குறைந்தது 3,000 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் மதிப்பிடுகின்றன.
இதனிடையே, பெரும்பாலான போராட்டங்கள் அடக்கப்பட்டாலும், நாடு தழுவிய அரசாங்க ஆதரவு பேரணிகள் மூலம் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |