எண்ணெய் கப்பலைத் திருட முயன்ற அமெரிக்க கடற்படை... விரட்டியடித்த ஈரான்! நடுக்கடலில் நடந்த பரபரப்பு சம்பவம்
ஈரானிய எண்ணெய் கப்பலைத் திருட, அமெரிக்க கடற்படை மேற்கொண்ட முயற்சியை இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (ஐஆர்ஜிசி) முறியடித்ததாக ஈரானிய அரசு ஊடகமான Mehr செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Mehr செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, ஓமன் கடலில் ஈரானிய எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கரைப் பறிமுதல் செய்த அமெரிக்கா, அதை திசை திருப்பி தெரியாத இடத்திற்கு அனுப்பியது.
அதே நேரத்தில், ஐஆர்ஜிசி கடற்படைப் படைகள் Heliborne நடவடிக்கை மேற்கொண்டு டேங்கரை மீட்டு ஈரானின் பிராந்திய கடல் பகுதிக்கு அனுப்பியது.
அமெரிக்கப் படைகள் பல ஹெலிகாப்டர்கள் மற்றும் போர்க்கப்பல்களைப் பயன்படுத்தி டேங்கரைப் பின்தொடர்ந்தன, ஆனால் அந்த முயற்சிகள் ஐஆர்ஜிசி படைகளால் முறியடிக்கப்பட்டது.
சில போர்க்கப்பல்களைப் பயன்படுத்தி அமெரிக்கப் படைகள் டேங்கரின் பாதையைத் தடுக்க முயன்றன, ஆனால் மீண்டும் அமெரிக்காவின் முயற்சி தோல்வியடைந்தன.
தற்போது அந்த எண்ணெய் கப்பல் ஈரான் கடல் பகுதியில் உள்ளது என Mehr செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க கடற்கொள்ளை முயற்சி தொடர்பான வீடியோவை விரைவில் வெளியிடப்போவதாக ஐஆர்ஜிசி அறிவித்துள்ளதாக Mehr குறிப்பிட்டுள்ளது.
#الحرس_الثوري الإيراني يزعم التصدي لمحاولة قوات أمريكية السيطرة على ناقلة نفط إيرانية في #بحر_عمان وينشر فيديو لما ادعى أنه"هروب الأمريكيين" أمام الحرس#إرم_نيوز #إيران #iran pic.twitter.com/5cwcYevW8w
— إرم نيوز (@EremNews) November 3, 2021