மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல்
அயர்லாந்து மல்யுத்த வீரரான கானர் மெக்ரேகோர், மரணத்தில் தருவாயில் சென்றபோது இயேசுவை சந்தித்ததாக கூறியுள்ளது வைரலாகியுள்ளது.
கானர் மெக்ரேகோர்
பிரபல MMA மல்யுத்த வீரரான கானர் மெக்ரேகோர் (Conor McGregor) அயர்லாந்தில் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் மற்றும் புளோரிடாவில் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்த்து போராடி வருகிறார். 
இந்த நிலையில் கானர் மெக்ரெகோர் தனது சமூக ஊடகப் பதிவில் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது.
37 வயதான அவர் தனது பதிவில், "நண்பர்களே, நான் திரும்பி வந்துவிட்டேன். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிகவும் முற்போக்கான சிந்தனை கொண்ட மருத்துவர்களை சந்தித்து, traumaவை சரிசெய்வதற்கான தொடர்ச்சியான சிகிச்சைகளை மேற்கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
நான் மெக்ஸிகோவின் Tijuana-வுக்குப் பயணம் செய்து AMBIOவில் Ibogaine சிகிச்சையை மேற்கொண்டேன். கடவுள் பின்னர் பரிசுத்த திரித்துவத்தில் என்னிடம் வந்தார். அவர் வல்லவர்! இயேசு, அவரது குழந்தை. மேரி, அவரது தாய். பிரதான தேவதூதர்கள்.
அனைவரும் பரலோகத்தில் உள்ளனர். எனக்கு ஒளி காட்டப்பட்டது.
சொர்க்கத்தின் வெள்ளை பளிங்கு படிகளில் இருந்து இயேசு இறங்கி, எனக்கு ஒரு கிரீடத்தால் அபிஷேகம் செய்தார். நான் காப்பாற்றப்பட்டேன்! என் மூளை; என் இதயம், என் ஆன்மா குணமடைந்தது!" என தெரிவித்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |