விமானத்தில் பணிப்பெண்ணிடம் கேவலமாக நடந்துகொண்ட நபருக்கு நேர்ந்த கதி!
நியூயார்க்கிற்கு செல்லும் விமானத்தில் பணிப்பெண்ணிடம் தனது கால்ச்சட்டையை கழற்றி அசிங்கமாக நடந்துகொண்ட ஐரிஷ் நாட்டவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படடவுள்ளது.
ஜனவரி 7-ஆம் திகதி டப்ளினில் இருந்து நியூயார்க் செல்லும் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் Galway-ஐ சேர்ந்த ஷேன் மெக்கினெர்னி (Shane McInerney) எனும் 29வயது இளைஞர் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
தகவல்களின்படி, ஷேன் மெக்கினெர்னி விமானத்தில், ஊழியர்கள் பல முறை சொல்லியும் முகக்கவசம் அணிய மறுத்துள்ளார்.
மேலும், ஒரு குளிர்பான கேனை தூக்கியெறிந்து பயணி ஒருவரின் தலையில் அடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அநாகரீகத்தின் உச்சமாக, அவர் தனது கால்ச்சட்டையை கழற்றி, உள்ளாடைகளை கீழே இழுத்துவிட்டு, ஒரு விமானப் பணிப்பெண் மற்றும் பயணிகள் முன் அசிங்கமாக நடந்துகொண்டுள்ளார்.
Picture: Facebook
விமானம், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் அவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மெக்னெர்னிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் கூறினார்.
McInerney ஒரு கால்பந்து அகாடமியில் வேலைக்கு சேருவதற்காக புளோரிடாவுக்குச் சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் விசாரணைக்காக காத்திருக்கும் நிலையில் 20,000 டொலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Picture Below: Instagram
