திமுகவில் போட்டியிடுகிறாரா நடிகர் வடிவேலு? தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியான தகவல்
நடிகர் வடிவேலு திமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
வடிவேலுவின் அரசியல் பிரச்சாரம்
நடிகர் வடிவேலு படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் அவர் மீம் மூலமாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். 2011 -ம் ஆண்டில் சினிமா உலகில் உச்சத்தில் இருந்தவர் நடிகர் வடிவேலு.
ஆனால், அரசியல் பிரச்சாரம் மூலம் சினிமாவில் வரும் வாய்ப்புகள் அவருக்கு குறைந்தது. இவர், 2011 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவுக்காக பிரச்சாரம் செய்வதில் ஸ்டார் பேச்சாளாராக இருந்தார். அந்த நேரத்தில் திமுக மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தது.
அதிலும், தேமுதிகவின் விஜயகாந்த் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தேமுதிகவை எதிர்த்து திமுகவிற்கு தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.
ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பின்பு அவரது சினிமா வாழ்க்கை சிக்கலானது. அவரை வைத்து படம் எடுத்தால் வெளியாகுமோ என்ற நிலை கூட உருவானது. பின்னர், அவர் அரசியலிலும் சினிமாவிலும் தன்னை தூரமாக வைத்துக் கொண்டார்.
மக்களவை தேர்தல்
இத்தனை நாட்கள் அரசியல் குறித்து பேசாமல் இருந்த நடிகர் வடிவேலு தற்போது அரசியல் குறித்தும், திமுக கருணாநிதி குறித்தும் பேச தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் திமுக சார்பில் மக்களவை தேர்தலில் களமிறக்கப்படுகிறாரோ என்ற கேள்வி உருவாகியுள்ளது. மேலும், தேர்தலில் நிற்பதற்கான முயற்சியில் நடிகர் வடிவேலு ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |