இணைகிறதா அதிமுக-அமமுக? உறுதியாக டிடிவி தினகரன் அளித்த பதில்
அதிமுக-அமமுக இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வெளியான யூகங்கள் குறித்து டிடிவி தெளிவுப்படுத்தியுள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுக-வின் பொதுக்குழு கூட்டத்தன்றே தெளிவாக சொல்லிவிட்டேன், கண்டிப்பாக நாங்கள் கூட்டணி அமைப்போம், அமமுக தான் அந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் என கூறினார்.
திமுக அதிகாரத்திற்கு வருவதை நாங்கள் தடுப்போம். கூட்டணி அமைப்பது குறித்து பல கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
அதிமுக-வுடனான கூட்டணி குறித்து யூகங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது என கூறினார்.
அதேபோல் டாக்டர் நமது எம்.ஜி.ஆர் செய்தித்தாளில் அதிமுக-அமமுக இணைய வேண்டும் என கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது குறித்த விளக்கமளித்த தினகரன், அது அந்த செய்தித்தாளின் நோக்கம். அது அமமுக பொதுச்செயலாளராகி என்னுடைய நோக்கமல்ல என தெளிவுப்படுத்தினார்.