முதுகுவலி, இடுப்பு வாயு பிடிப்பை எளிதில் சரி செய்யனுமா? இந்த பயிற்சியை செய்தாலே போதும்
yoga
exercise
back pain
Gas capture
By Kishanthini
பொதுவாக இன்றைய பலரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினையாக முதுகுவலி, வாயு பிடிப்பு உள்ளது. இது பல காரணங்களால் ஏற்படுகின்றது. இதனை எளிய முறையில் போக்க ஒரு சில உடற்பயிற்சிகள் உதவுகின்றது.
அதில் உஸ்திரசனா ( Ustrasana)பெரிதும் உதவியாக இருக்கின்றது. தற்போது இதனை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
எப்படி செய்யலாம்?
- விரிப்பில் முழங்காலிட்டு அமரவும். முட்டுக்களை அகலமாக விரித்து உட்காரவும்.
- மார்பு, கழுத்தை சிறிது பின் நோக்கி வளைத்து தலையை பின்புறம் தொங்க விட்ட நிலையில் ஒவ்வொரு கையாக உடலின் பின் பகுதிக்கு கொண்டு சென்று விரல்களை ஊன்றிய குதிகால் பகுதிகளை பிடிக்கவும்.
-
வாய்மூடிய நிலையில் மூச்சை நன்றாக உள்வாங்கி வெளியிடவும்.
- 15 வினாடிகள் இவ்விதம் இருந்த பின்பு ஒவ்வொரு கையாக முன் கொண்டு வந்து முழங்காலிட்டு அமரவும்.
- இரண்டு நிமிட இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒரு முறை இந்த ஆசனம் செய்யலாம்.
- முழங்கால் மூட்டுக்களிலுள்ள நச்சு நீர் குறையும். ஆஸ்த்துமா நோய் குறையும். இது ஒரு மருத்துவ ஆசனமாகும். தைராய்டு கிளாண்டுகள் இயக்கம் சீர்பெற உதவும்.
பலன்கள்
-
முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது.
- முதுகுவலி, சுவாசக் கோளாறுகள், முழங்கால் வலி, இடுப்பு வலி இடுப்பு வாயு பிடிப்பு, கீழ் வாயு வாயுக் கோளாறு, இரைப்பை கோளாறுகள், முதலியவற்றிற்கு நல்லது.
- தன்னம்பிக்கையினை வளர்க்கிறது. சோம்பலை நீக்கி பயிற்சியாளரைச் சுறுசுறுப்பாகவும் செய்கிறது.
குறிப்பு
இதய நோயுள்ளவர்கள் கவனமாகச் செய்யவும். குடல்வாயு நோயுள்ளவர்கள் இதைச் செய்ய கூடாது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US