கேரளாவில் கால் பதிக்கிறதா பாஜக? 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ் கோபி முன்னிலை
இந்தியாவில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வரும் நிலையில் கேரளாவின் நிலவரத்தை பார்க்கலாம்.
கேரளா நிலவரம்
அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள மொத்தம் 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியான யுடிஎஃப் கூட்டணி 17 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி 2 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இதில், திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில்குமார் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.
65158 வாக்குகளுடன் சுரேஷ் கோபி முன்னிலையில் உள்ளார். அடுத்ததாக 55016 வாக்குகளுடன் சுனில்குமார் உள்ளார். இருவருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 10142 ஆகும்.
இதேபோல திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் சசி தரூருக்கும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.
இங்கு, தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது இருவருக்கும் இடையே 8 வாக்குகள் தான் வித்தியாசம் இருந்தது.
அடுத்ததாக முதல் சுற்று எண்ணப்பட்ட போது சசி தரூர் 15220 வாக்குகளும், ராஜீவ் சந்திரசேகர் 11637 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் 3583 ஆகும்.
இதனிடையே, சிபிஐ வேட்பாளர் பன்னியன் ரவீந்திரன் 11069 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |