பிரித்தானியா உடனான உறவை முறித்துக் கொள்ளப்போகிறதா கனடா? மௌனம் கலைத்தார் பிரதமர் ட்ரூடோ
பிரித்தானியா அரச குடும்பத்துடனான உறவை முறித்துக்கொள்வது பற்றி கனடா பிரதமர் ட்ரூடோ மௌனம் கலைத்துள்ளார்.
ஓப்ராவுடனான நேர்காணலில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் , அரச குடும்பத்தில் சேர்ந்த பிறகு தான் மௌனம் ஆக்கப்பட்டதாகவும், அவர் எதிர்பார்த்த ஆதரவைப் பெறவில்லை என்றும், அரச குடும்பத்தில் இனவெறி இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்த நேர்காணலை தொடர்ந்து பிரித்தானியா முடியாட்சியுடனான உறவுகளை கனடா முறித்துக் கொள்ள வேண்டும் என அழைப்புகள் அதிகரித்தன.
இங்கிலாந்து காமன்வெல்த் உறுப்பினராக உள்ள கனடாவின் அதிகாரப்பூர்வ அரச தலைவர் பிரித்தானியா ராணி எலிசபெத் II ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியா முடியாட்சியுடன் உறவுகளை முறித்துக் கொள்வது தொடர்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மௌனம் கலைத்துள்ளார்.
கனடாவில் அரசியலமைப்பு மாற்றத்தைத் தொடங்குவது மற்றும் பிரித்தானியா அரச குடும்பத்துடன் உறவுகளை முறித்து கொள்வது குறித்து விவாதத்தில் ஈடுபடுவதற்கான சரியான தருணம் இப்போது இல்லை என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.