Fixed Deposit -க்கு கூட வரி பிடித்தமா? பேங்க் மேனேஜரை தாக்கிய வாடிக்கையாளர்
குஜராத் மாநிலத்தில் வரி பிடித்தம் தொடர்பாக வங்கி மேலாளருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே நடந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
இந்திய மாநிலமான குஜராத், அகமதாபாத்தில் வஸ்த்ராபூரில் உள்ள யூனியன் வங்கி கிளையில் வங்கி மேலாளருக்கும், வாடிக்கையாளருக்கு இடையே நடந்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோவில், பிக்சட் டெபாசிட் (Fixed Deposit) சேமிப்புக்கு அதிக வரி பிடித்தம் செய்ததால் ஜெய்மன் ராவல் என்ற வாடிக்கையாளர் ஒருவர் வங்கி மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்துள்ளது. அப்போது, வாடிக்கையாளர் ஜெய்மன் ராவல் வங்கி மேலாளரை தாக்கியுள்ளார். அந்த நேரத்தில் ஜெய்மன் ராவலின் தாயார் தடுக்க முயன்ற போதும் தாக்குதலை தொடர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் வஸ்த்ராபூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
'Customer' turned 'Crocodile' after TDS Deduction in Bank FD. FM sud instruct Bank staffs to learn 'taekwondo' for self defense. pic.twitter.com/CEDarfxcqi
— Newton Bank Kumar (@idesibanda) December 6, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |