பெண்கள் சிக்ஸ் பேக் வைத்துக்கொள்வது நல்லதா?
சிக்ஸ்பேக் என்பது வயிற்றின் தசைப்பகுதி மடிந்து ஆறு கோடுகள் போல் தெரியும். இதைத்தான் சிக்ஸ்பேக் என்கிறார்கள்.
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் மட்டுமே இந்த சிக்ஸ்பேக் இருக்கும். சிலநாட்கள் உடற்பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டால் இந்த சிக்ஸ்பேக் காணாமல் போய்விடும்.
ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன அவரவர்கள் வயது உடல் நலத்திற்கேற்ப உடற்யிற்சி செய்வது நல்லது.
இதனால், பிற்காலத்தில் சர்க்கரை நோய், ரத்தம் அழுத்தம், இதயநோய் போன்றவற்றை தவிர்க்க முடியும்.
இளம் வயதில் முறையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் பெரிய அளவில் நோய் தாக்கம் இருக்காது.
நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். உடல் உழைப்பைக் கொண்டவர்களைத் தவிர மற்றவர்கள் தங்கள் வயது உடல்நிலைக்கேற்ப உடற்பயிற்சி செய்யவேண்டும்.