உடல்நிலை சரியில்லாத காலத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லதா?
பொதுவாக நம்மில் பலருக்கு உடல்நிலை சரி இல்லதா நிலையில் உடற்பயிற்சி செய்யலாமா? வேண்டாம் என்ற சந்தேகம் காணப்படும்.
உடல் நலம் பாதிக்கப்பட்டால், அதில் இருந்து சரி செய்ய நம்முடைய உடல் கடுமையாக பாடுபடும். கடுமையாக உழைக்கும். இந்த சூழலில் நாம் ஓய்வாக இருப்பதுதான் நல்லது.
இருப்பினும் உடல்நிலை சரியில்லாத நிலையில் உடற்பயிற்சி செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
உடற்பயிற்சி செய்வது நல்லதா?
லேசான காய்ச்சல்தான் என்று கூறிவிட்டு ஜிம் போன்று வெளி இடங்களுக்குச் செல்வதன் மூலம் மற்றவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, உடல் நலம் பாதிக்கப்பட்டால் சரியாகும் வரை ஓய்வாக இருப்பது நல்லது. அது லேசான பாதிப்பாக இருந்தாலும் சரி, ஓய்வாக இருந்து, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள உதவி செய்ய வேண்டும்.
உடல் நலம் சரியான பிறகு எடுத்த எடுப்பில் கடுமையான பயிற்சிகள் செய்யக் கூடாது.
லேசான பயிற்சிகளுடன் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக கடினமான பயிற்சி என்ற நிலைக்கு செல்ல வேண்டும்.
முக்கிய குறிப்பு
உடற்பயிற்சி ஆலோசகர் ஆலோசனை பெற்று செயல்படலாம்.
லேசான பாதிப்பாக இல்லாமல், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற தீவிர பாதிப்பாக இருந்தால், மருத்துவர் ஆலோசனை பெற்று அதன் அடிப்படையில் செயல்படுவது நல்லது.