அமெரிக்க அதிபராகும் ஜோ பைடன் இந்தியர்களை அடிமைப்படுத்தியவர்களின் வாரிசா?: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன், தனக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக முன்பு தெரிவித்திருந்தார்.
1970களில், இந்தியாவின் மும்பையிலிருந்து தனக்கு பைடன் என்ற பெயர் கொண்ட ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் வந்ததாகவும், அதனால் தனக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளது என்றும், 2013ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தபோது தெரிவித்திருந்தார் ஜோ பைடன்.
தனது மூதாதையரின் பெயர் ஜார்ஜ் பைடன் என்றும், அவர் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியதாகவும், அவர் மும்பைக்கு வந்ததாகவும் தெரிவித்திருந்தார் ஜோ பைடன்.
அத்துடன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸும், தனக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளது எனவும், காலம் சென்ற தனது தாயார் இந்தியாவில் பிறந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ஜோ பைடன் கூறுவது உண்மையானால், அவருக்கும் கமலா ஹாரிஸுக்கும் இந்தியாவுடன் தொடர்பு இருப்பது உண்மைதான்.
ஆனால், லண்டன் King's Collegeஇல் பேராசிரியராக பணியாற்றும் Tim Willasey-Wilsey என்பவர் வேறு ஒரு கதையை சொல்கிறார்.
ஜோ பைடன், கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய கிறிஸ்டோபர் பைடன் என்பவரது உறவினராகத்தான் இருக்கமுடியும் என்கிறார் அவர்.
இந்த கிறிஸ்டோபர் பைடனும், கமலா ஹாரிஸின் தாயார் பிறந்த அதே சென்னையில்தான் (அப்போது அது Madras) வாழ்ந்திருக்கிறார், இறந்தும் இருக்கிறார்.
ஆனால், கமலாவின் தாத்தா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், ஜோ பைடனின் தாத்தாவான கிறிஸ்டோபரோ, அவருக்கு எதிரணியில் நின்ற பிரித்தானிய ராஜ்யத்தை உருவாக்குவதற்காக வந்த ஒருவர்.
கிறிஸ்டோபர் பிறந்த 1800களின் துவக்கத்தில், கிழக்கிந்திய கம்பெனி தென்னிந்தியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இந்தியாவை சூறையாடிக்கொண்டிருந்திருக்கிறது.
கிறிஸ்டோபர் பைடன், 1821ஆம் ஆண்டு, கிழக்கிந்திய கம்பெனியின் ஆயுதம் தாங்கிய கப்பல்களில் ஒன்றான Princess Charlotte of Wales என்ற கப்பலின் கேப்டனாக ஆகியிருக்கிறார்.
தொண்டு நிறுவன பணி, கலங்கரை விளக்கங்கள் அமைத்தல் என நற்பணியாற்றியதற்காக உள்ளூர் மக்களால் அவர் பாராட்டப்பட்டாலும், அவரது கால கட்டத்திலேயே பிரித்தானியர்களுக்கும் இந்தியர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது.
சுதந்திரப்போராட்டத்தின் முதல் கட்ட போராட்டம் என கருதப்படும் 1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க்கலகம் என்ற புரட்சி அப்போதுதான் வெடித்துள்ளது.
அடுத்த ஆண்டு கிறிஸ்டோபர் உயிரிழந்துள்ளார், அவர் புரட்சி செய்த ஒரு கூட்டத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆக, இந்தியாவுடன் தொடர்பு உள்ளதாக ஜோ பைடன் கூறினாலும், அது ஒரு சிக்கலான உறவு என்கிறார் Tim Willasey-Wilsey.


